பள்ளி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பாக்கிஸ்தானியர்! கல்வி அமைச்சு விசாரணை!

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
ஈப்போவில் உள்ள தேசிய பள்ளியில் பாக்கிஸ்தானியர் ஒருவர் சிறப்புப் பிரமுகராகக் கலந்து நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகக் கல்வி அமைச்சு விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாகக் கல்வி அமைச்சர் Fadlina Sidek நம்பிக்கை தெரிவித்தார். பேராக் கிரியான் மாவட்டத்திலுள்ள தேசிய பள்ளியின் ஆண்டு விளையாட்டுப் போட்டியைப் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு ஆடவர் ஒருவரால் தொடக்கி வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் கல்வி அதிகாரிகளின் இது மாதிரியான செயல்கள் கண்டிக்கத்தக்கது என்றும் கல்வி அமைச்சர் Fadlina Sidek தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் பெற்றோர்களிடமிருந்து புகாரைப் பெற்றதும் பேராக் மாநிலக் கல்வி அதிகாரிகளிடமிருந்து சம்மந்தப்பட்ட பள்ளியிடமிருந்து விளக்கம் கேட்டிருப்பதாகவும் அளிக்கப்படும் விளக்கத்திற்கு ஏற்ப கல்வி அமைச்சு நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் Fadlina Sidek உறுதியளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக உண்மையற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என கல்வி அமைச்சர் Fadlina Sidek கேட்டுக் கொண்டார்.
Seorang warga Pakistan merasmikan acara sukan di sekolah kebangsaan di Perak, mencetuskan kontroversi. Menteri Pendidikan Fadlina Sidek mengesahkan siasatan sedang dijalankan dan tindakan akan diambil berdasarkan penjelasan yang diberikan pihak sekolah dan pegawai pendidikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *