சபா தேர்தலில் பி.கே.ஆர் 13 சட்டமன்றங்களில் போட்டியிடும்!

top-news

ஜூன் 29,


எதிர்வரும் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆர் கட்சி குறைந்தபட்சம் 13 சட்டமன்றங்களில் போட்டியிடும் என சபா மாநில பி.கே.ஆர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Datuk Mustapha Sakmud தெரிவித்தார். சபா மாநில 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் சபா மக்களின் ஆதரவை முழுமையாகப் பக்காத்தான் ஹராப்பான் பெறும் என்பதால் 73 சட்டமன்றங்களில் கூட்டணியின் அடிப்படையில் பி.கே.ஆர் குறைந்தபட்சம் 13 சட்டமன்றங்களில் போட்டியிடும் என அவர் விளக்கமளித்தார். 

இதுவரையில் 15க்கும் மேற்பட்ட சட்டமன்றங்களில் பி.கே.ஆரின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பி.கே.ஆர் 13 சட்டமன்றங்களுக்குக் குறைவாகப் போட்டியிடாது என சபா மாநில பி.கே.ஆர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Datuk Mustapha Sakmud தெரிவித்தார். பக்காத்தான், பாரிசான், GRS ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுமூகமாகக் கூட்டணிக்கானத் தொகுதிப் பங்கீடுகள் நடத்தப்படும் என தாம் நம்புவதாக சபா மாநில பி.கே.ஆர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Datuk Mustapha Sakmud தெரிவித்தார்.

PKR Sabah akan bertanding sekurang-kurangnya 13 kerusi DUN pada Pilihan Raya Negeri Sabah ke-17. Koordinator negeri Datuk Mustapha Sakmud yakin PKR akan mendapat sokongan padu rakyat Sabah melalui pembahagian kerusi dengan parti gabungan lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *