பினாங்கு எல்ஆர்டி கட்டுமானத்திற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை!

- Muthu Kumar
- 02 Jul, 2025
ஜோர்ஜ்டவுன், ஜூலை 2-
முத்தியாரா எல்ஆர்டி திட்டக் கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ நோட்டிஸ் அல்லது அனுமதிக்காக பினாங்கு மாநில அரசாங்கம் இன்னமும் காத்திருக்கிறது.
போக்குவரத்து அமைச்சிடமிருந்து அதிகாரப்பூர்வ நோட்டிஸ் இன்னும் வெளியிடப்படா விட்டாலும், எல்ஆர்டி திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதிகளில் சில தொடக்கக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக, மாநில முதலைமைச்சர் சௌ கோன் இயூ தெரிவித்தார்.
நில ஆய்வு, நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்குதல் தொடர்பான பேச்சுக்கள், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுடன் நடத்தப்பட்டும் விட்டதாக அவர் கூறினார்.கட்டுமானப் பணிகளை திட்டமிடப்பட்டபடி முழு வீச்சுடன் மேற்கொள்ள அதிகாரப்பூர்வ நோட்டிஸ் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
"இப்போதைக்கு, போக்குவரத்து அமைச்சு மற்றும் எம்ஆர்டி கார்ப்பரேஷனிடமிருந்து அதிகாரப்பூர்வ நோட்டிஸுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்" என்று ஜோர்ஜ்டவுனில் நேற்று 2025ஆம் ஆண்டு பினாங்கு மாநில போக்குவரத்து தினக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது செள தெரிவித்தார்.
மொத்தம் 29.5 கிலோ மீட்டர் தூரமுடைய முத்தியாரா எல்ஆர்டி திட்டத்தில் 21 நிலையங்கள் கட்டப்படவுள்ளன. பெருநிலத்திற்கும் பினாங்கிற்கும் இடையிலான இத்திட்டம், சாலைப் போக்குவரத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கை ஆற்றும்.இதன் பிரதான தடத் திட்டம், பினாங்கு சென்ட்ரல் மற்றும் கொம்தார் நிலையத்துடன் பினாங்கு சிலிக்கோன் தீவையும் இணைக்கும்.
இந்நிலையில், அதிகாரப்பூர்வ நோட்டிஸ் எப்போது கிடைக்கக் கூடும் என்று கேட்டபோது, இன்னும் ஓரிரு மாதங்களில் அது கிடைத்துவிடலாம் என்று சௌ பதிலளித்தார்.
Kerajaan Pulau Pinang masih menunggu notis rasmi daripada Kementerian Pengangkutan untuk memulakan projek LRT Mutiara. Beberapa kerja awal telah bermula, namun pembinaan penuh memerlukan kelulusan rasmi, dijangka diterima dalam satu hingga dua bulan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *