Putra Heights வெடிப்பிலிருந்து நான் மீளவில்லை! Amirudin Shari உருக்கம்!

top-news

ஜூன் 30,


Putra Heights எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் தம்மை அதிகப்படியாகப் பாதித்ததாகவும் தாம் இன்னமும் அந்த தாக்கத்திலிருந்து மீளவில்லை என்றும் சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari உருக்குமாகத் தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தால் முக்கிய சில முடிவுகளைக் கனத்த இதயத்துடன் தாம் எடுத்திருப்பதாக Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். சிலாங்கூரில் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில மேம்பாட்டுத் திட்டங்களை மறு ஆய்வு செய்யும் வரையில் நிறுத்தி வைக்கப்படவிருப்பதாக Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். 

தற்போது தேசிய காவல் துறையின் ஒரு குழுவும் மாநில அரசின் சிறப்பு நடவடிக்கை குழுவும் என இரு சிறப்புப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வகையான நில மேம்பாட்டுத் திட்டங்களை இந்த இரு குழுக்களும் கண்காணிக்கும் என்றும் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார். Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பு ஏற்பட்டதற்கு 3 முக்கிய காரணிகள் இருப்பதாகவும் அதில் ஒன்று குடியிருப்புப் பகுதியின் அருகில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் என சிலாங்கூர் மெந்திரி பெசார் Datuk Seri Amirudin Shari தெரிவித்தார்.


Menteri Besar Selangor, Datuk Seri Amirudin Shari mengakui masih terkesan dengan insiden letupan paip gas di Putra Heights. Beliau mengumumkan projek pembangunan tanah berhampiran kawasan perumahan akan disemak semula dan digantung sementara bagi menjaga keselamatan penduduk.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *