என்னை பழிவாங்க என் திட்டத்தை மாற்றாதீர்! RAFIZI எச்சரிக்கை!

top-news

ஜூன் 28,


தான் பொருளாதார அமைச்சராக இருந்த போது வரையறுக்கப்பட்ட RMK 13 எனும் 13 ஆவது தேசிய வரைவுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யவிருப்பதை எதிர்த்து முன்னாள் பொருளாதார அமைச்சரும் பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவருமான Datuk Seri Rafizi Ramli கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் தகவல்தொடர்புக் குழு தலைவருவரான Datuk Fahmi Fadzil 13 ஆவது தேசிய வரைவுத் திட்டத்தில் திருத்தங்களைச் செய்யவிருப்பதாகவும் அதில் பல்வேறு முக்கிய அம்சங்களை மாற்றியமைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என Datuk Seri Rafizi Ramli குற்றம்சாட்டினார்.

13 ஆவது தேசிய வரைவுத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரின் உழைப்பும் உள்ளது என்றும் நான் ஒருவன் மட்டுமே அதனைக் கட்டமைக்கவில்லை என Datuk Seri Rafizi Ramli நினைவூட்டினார். இதில் பல அரசுத் துறைகள் சம்மந்தப்பட்டிருப்பதால் அரசுத் துறை அதிகாரிகளின் உழைப்பையும் Datuk Fahmi Fadzil வீணடிக்க போகிறார் என Datuk Seri Rafizi Ramli சுட்டிக்காட்டினார். என் மீது தனிப்பட்ட முறையில் இருக்கும் வெறுப்புக்காக அரசு அதிகாரிகள் கட்டமைத்த ஒரு திட்டத்தை மாற்றுவது என்பது அபத்தமானது என Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.


Datuk Seri Rafizi Ramli menegaskan agar kerajaan tidak mengubah RMK13, pelan pembangunan ekonomi yang dirangka ketika beliau menjadi Menteri Ekonomi. Beliau mendakwa tindakan mengubah rancangan itu demi kepentingan dendam peribadi akan menjejaskan usaha pelbagai pihak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *