நீதிமன்ற வழக்குகளுக்குப் பயப்படமாட்டேன்! – அம்னோவுக்கு RAFIZI RAMLI பதிலடி!

- Sangeetha K Loganathan
- 01 Jul, 2025
ஜூலை 1,
அரசாங்கத்தைத் தொடர்ந்து விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramli மீது வழக்கு தொடுப்பேன் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zakarshi கருத்து தெரிவித்திருந்த நிலையில் எந்த நீதிமன்ற வழக்குகளுக்கும் நான் பயப்படமாட்டேன் என RAFIZI RAMLI பதிலடி பதிலடிக் கொடுத்துள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும் என்றும் என்னுடைய கட்சி விசுவாசத்தை விமர்சிக்க Puad Zakarshiக்கு தகுதி இல்லை என்றும் 2018 பொதுத்தேர்தலில் அம்னோ அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என்றதும் அம்னோவை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடவிருப்பதாகத் தெரிவித்திருந்த Puad Zakarshi கட்சி விசுவாசத்தைப் பற்றி பேசுகிறார் என Datuk Seri Rafizi Ramli சாடினார்.
Puad Zakarshiக்கு என் மீது கடந்த காலத்தில் பகை இருப்பதை Datuk Seri Rafizi Ramli சுட்டிக்காட்டினார். கடந்த 2015இல் அப்போதைய JASA எனும் அரசு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த Puad Zakarshi நான் நஜீப்பிற்கு எதிராகச் செயல்படுவதாக என் மீது வழக்கு தொடுத்தார். அப்போதே என் மீது 13 வழக்குகளைப் பதிவுசெய்தவர் Puad Zakarshi. அந்த 13 வழக்குகளையும் நான் எதிர்கொண்டேன் என Datuk Seri Rafizi Ramli நினைவூட்டினார். என்னுடைய விசுவாசம் என்பது மக்களுக்கானது. ஆனாலும் வயதில் மூத்தவர், முதியவரான Puad Zakarshi சொல்லும் கருத்துகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார்.
Rafizi Ramli menegaskan beliau tidak gentar berdepan tindakan mahkamah seperti diugut oleh Puad Zarkashi. Katanya, beliau sudah biasa berdepan pelbagai kes sebelum ini dan kritikan beliau adalah untuk rakyat, bukan untuk kepentingan peribadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *