RM 595,000 மதிப்பிலான இறைச்சைகளைக் கடத்திய இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கடத்தப்பட்ட இறைச்சிகளை எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிளாந்தானில் உள்ள Kampung Bukit Tandak சாலையில் PGA அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்டதாகவும் லாரியிலிருந்து 8,910 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
37 வயதான லாரி ஓட்டுநரும் 45 வயது மற்றோர் ஆடவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இருவரும் உள்நாட்டு ஆடவரனகள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 8,910 கிலோ இறைச்சிகளின் மதிப்பு RM 595,000 என கணக்கிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் முறையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாதவை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Dua lelaki tempatan ditahan di Kelantan selepas pihak PGA merampas 8,910 kilogram daging sejuk beku yang diseludup dari luar negara tanpa dokumen sah. Nilai rampasan dianggarkan RM595,000 dan kes disiasat di bawah undang-undang penyeludupan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *