திருநங்கையோ அல்லது திருநம்பியோ! அதற்கு காரணம் குரோமோசோம்கள் மட்டுமே!

- Muthu Kumar
- 06 Dec, 2024
திருநங்கைகளை நமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. ஒன்று அவர்களை வெறுக்கிறோம் இல்லை ஒதுக்கி வைக்கிறோம்,இதற்கு காரணம் அவர்களைப்பற்றிய புரிதல் நம்மிடையே இல்லாததே ,ஒரு ஆணோ இல்லை பெண்ணோ இவ்வுலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதே அளவு உரிமை திருநங்கைகளுக்கும் உண்டு.
இயற்கையான முறையில் ஒரு குழந்தை பிறக்க ஆணும் பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் இதனால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.ஆனால், மூன்றாம் பாலினத்தவர் பிறப்பு என்பது நாம், நினைப்பது போன்று இது கடினமான விஷம் இல்லை, பொதுவான விஷயம்தான். பிறக்கும்போது ஆணாக இருக்கும், சிலர் பிற்காலத்தில் ஆணாகவே இருப்பதில்லை. அதேபோல பிறக்கும் போது பெண்ணாக இருக்கும் சிலரும் பெண்ணாகவே தொடருவதும் இல்லை. அவர்கள் திருநங்கை அல்லது திருநம்பி என்று அறியப்படுகின்றனர். இதை மருத்துவத்தில் AFAB மற்றும் AMAB என்ற குறிப்பிடப்படுகிறது. அதாவது "assigned female/male at birth" என்பதே விரிவாக்கம்.
மனித உடலில் ஒவ்வொரு செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம் என்பது மனித உடலை பற்றிய தகவல் அடங்கிய மூலக்கூறு. இந்த 46 குரோமோசோம்களும் 23 ஜோடிகளாவே இருக்கின்றன. இதில் முதலில் இருக்கும் 22 ஜோடி குரோமோசோம்களை ஆட்டோ சோம் என்று குறிப்பிடுகின்றனர். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். 23வது ஜோடி குரோமோசோமானது பாலியலை முடிவு செய்யும் குரோமோசோமாக. 23வது குரோமோசோம் ஆணாக இருந்தால் XY என்றும், பெண்ணாக இருந்தால் XX என்றும் இடம்பெறுகிறது.
பெண்ணின் கருமுட்டையில் XX குரோமோசோம் மட்டும் இடம்பெற்றிருக்கும். அதுவே ஆண்ணின் விந்தணுவில் XY குரோமோசோம்கள் இருக்கும். அதில் எந்த குரோமோசோம் கருமுட்டையுடன் இணையுமோ, அதுவே குழந்தையின் பாலினமாக அமைகிறது.
ஒரு கரு உருவாகி 7வது வாரத்திலிருந்து, 12-வது வாரத்துக்குள் அது ஆணா இல்லை பெண்ணா என்பது முடிவாகிறது. உடலில் இருக்கும் proto gonads என்ற சதை அமைப்பு, பெண்ணுறுப்பாக வளர்ச்சியடையும். XY குரோமோசோம் கொண்ட சில குழந்தைகளில் Y குரோமோசோம் 7 வாரங்கள் கடந்தும் பாலின உறுப்பு வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கும். அப்படி இருந்தால், அது பெண்ணுறுப்பு வளரத்தொடங்கும். அந்த குழந்தை பிறக்கும் போது நமக்கும், பெண் குழந்தையாகவே தெரியும். அந்த குழந்தைகள் வளர வளர ஆண்களின் குணம் வெளிப்படும். அவர்களே திருநம்பியாக மாறுகின்றனர்.
ஒரு பெண்ணின் x குரோமோசோம் ஆணின் x குரோமோசோமை சந்திக்கும் போது, பெண் கரு உருவாகிறது. அதேசமயம் ஒரு பெண்ணின் x குரோமோசோமும் ஆணின் y குரோமோசோமும் சந்திக்கும் போது ஆண் கரு உருவாகிறது. அதேசமயம் குரோமோசோம்களில் கோளாறு ஏற்படும் போது, மூன்றாம் பாலின கரு உருவாகிறது.
அறிவியலின் படி, கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில், ஆண் மற்றும் பெண் கருவின் பிறப்புறுப்புகள் ஒரே திசுக்களில் இருந்து உருவாகின்றன. இதில், ஆண்களின் இனப்பெருக்க திசுக்களில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கியமானது. ஆண்குறி அதன் அளவு அதிகமாக இருக்கும்போது மட்டுமே உருவாகிறது.
அதேசமயம் ஸ்க்ரோட்டம் மற்றும் ஆண்குறி சிறுநீர்ப்பை ஆகியவை கருவை பெண்ணாக ஆக்குகின்றன. ஆனால் இவை திருநங்கைகளின் கருவில் தொந்தரவு அடைகின்றன. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் குறைபாடுதான் திருநங்கைகளின் பிறப்புக்குக் காரணம். ஆண் இனப்பெருக்க உறுப்பு ஆரம்பத்தில் முழுமையாக வளர்ச்சியடையாததால் இது நிகழ்கிறது. ஆண் குழந்தை சிறிய ஆணுறுப்புடனும் டெஸ்டிஸுடனும் பிறப்பதற்கு இதுவே காரணம்.
மாற்றுத்திறனாளி குழந்தை பிறந்ததற்கான காரணம் வளர்சிதை மாற்றக் கோளாறு. இது பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா எனப்படும் அசாதாரண குரோமோசோம்களால் நிகழ்கிறது. குரோமோசோம் கோளாறுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மரபணு கோளாறுகள் காரணமாக இது நிகழலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *