சபா கனிமவள ஊழலில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் தொழிலதிபரிடமும் நீதிமன்றம் விசாரணை!

- Sangeetha K Loganathan
- 30 Jun, 2025
ஜூன் 30,
சபா கனிமவள ஊழலில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் Tanjung Batu சட்டமன்ற உறுப்பினர் Datuk Andi Muhammad Suryady Bandy, Sindumin சட்டமன்ற உறுப்பினர் Datuk Dr Yusof Josree Yacob ஆகிய இருவரிடமும் இன்று கோத்தா கினபாலு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். இரு சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் தொழிலதிபர் Datuk Tei Jiann Cheing விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாகக் கட்சியினர்களும் நீதிமன்ற வளாகத்தில் சூழ்ந்ததால் அடுத்த நீதிமன்ற விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட இரு சட்டமன்ற உறுப்பினர்களும் தனித் தனியாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி Jason Juga உத்தரவிட்டார்.
தொழிலதிபர் Datuk Tei Jiann Cheing சபா மாநிலத்தின் கனிமவளக் குத்தகைக்காக RM350,000 லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற மேல்விசாரணையைக் கோரினார். கடந்த மார்ச் 2023 இல் கோத்தாகினாபாலுவில் உள்ல சொகுசு தங்கும் விடுதி ஒன்றில் சபா மாநிலத் தொழில்துறை மேம்பாடு தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினரான 44 வயதான Datuk Andi Muhammad Suryady Bandy RM150,000 லஞ்சமாகப் பெற்றதாகவும் 66 வயதான Datuk Dr Yusof Josree Yacob RM200,000 லஞ்சமாகப் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையையும் ஜாமின் மனுவையும் தாக்கல் செய்த நிலையில் இருவருக்கும் RM50,000 ஜாமின் வழங்கப்பட்டதுடன் அவர்களின் பாஸ்போர்ட்டையும் நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணை ஆகஸ்ட் 5 மேற்கொள்ளப்படும் என்றும் சம்மந்தப்பட்டுள்ள இரு சட்டமன்ற உறுப்பினர்களும் மாதமொரு முறை சபா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி Jason Juga உத்தரவிட்டார்.
Dua ADUN Sabah dan seorang ahli perniagaan didakwa terlibat kes rasuah berkaitan konsesi mineral Sabah. Mahkamah Kota Kinabalu memerintahkan mereka hadir berasingan dan pasport diserah. Perbicaraan seterusnya ditetapkan 5 Ogos dengan jaminan RM50,000 setiap seorang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *