சபா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேர தேமு தயாராக இருக்கிறது!

top-news
FREE WEBSITE AD

தங்காக், ஜூன் 30-

சபா மாநில சட்டமன்றத் தேர்தலில், எந்த ஓர் உள்ளூர் அரசியல் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து பணியாற்ற அம்னோவும் தேசிய முன்னணியும் திறந்த மனதுடன் தயாராக இருக்கின்றன என்று, அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் அறிவித்துள்ளார்.

மாநிலத்தின் இதர கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அவசியத்தை தேசிய முன்னணி உணர்ந்திருப்பதாக, தேசிய முன்னணி துணைத் தலைவருமான முஹமட் கூறியுள்ளார்.“நாம் இனியும் தனித்து செயல்பட முடியாது. சபா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நமக்கு இதர கட்சிகளும் தேவைப்படுகின்றன" என்று கூறிய முஹமட், அத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் சேர்ந்து பணியாற்ற தேசிய முன்னணி ஏற்கெனவே இணக்கம் கண்டு விட்டது என்றார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலக் கட்சிகளுடனான ஒத்துழைப்பு குறித்து இக்கூட்டணி ஆராய்ந்து வருவதாக, வெளியுறவு அமைச்சருமான முஹமட் தெரிவித்தார்."அனைத்து வகையான விஷயங்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இல்லாமல், ஒரு வலிமையுடைய அணியாக சபா மாநில சட்டமன்றத் தேர்தல் களத்தில் இறங்க நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஜொகூர், தங்காக்கில் உள்ள லேடாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது முஹமட் இதனைத் தெரிவித்தார்.மையான அணி இருந்தால், யாருக்கு தங்களின் ஆதரவை வழங்குவது என்பதில் வாக்காளர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்று கூறிய அவர், இதன் வழி மாநிலத்தையும் சுமுகமாக நிர்வகிக்கவும் முடியும் என்றார்.

மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியுடனான அரசியல் ஒத்துழைப்பை பார்ட்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) இதற்கு முன்னர் நிராகரித்திருந்தது. தேசிய முன்னணி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியை விட்டு பிபிஎஸ் வெளியேறி இருந்தது. இந்நிலையில், மாநில சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கவோ அல்லது ஒன்றாகச் சேர்ந்து ஒத்துழைக்கவோ பிபிஎஸ்சுக்கு அழைப்பு விடுக்க, சபா அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் சில தினங்களுக்கு முன்னர் மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியுடன் சேர்ந்து பணியாற்ற போவதில்லை என்று, பிபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததுசபா மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு தவணைக் காலம் இவ்வாண்டு நவம்பர் 11அம் தேதியுடன் முடிவடைய விருக்கிறது. அதற்குள் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டுவிட வேண்டும்.

Amno dan Barisan Nasional bersedia bekerjasama dengan parti tempatan bagi pilihan raya negeri Sabah. Mereka mahu membentuk pakatan kuat, termasuk dengan Pakatan Harapan. Namun, PBS menolak kerjasama tersebut. Pilihan raya mesti diadakan sebelum 11 November 2025.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *