துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞர்கள் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 03 Jul, 2025
ஜூலை 3,
ஆடவர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மற்றோர் ஆடவரை மிரட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக நம்பப்படும் இளைஞர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்திருப்பதாக Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12.55 மணிக்குக் கோலாலம்பூர் Taman Desa சாலையில் நிகழ்ந்ததாகவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் துப்பாக்கி போலி துப்பாக்கி என கண்டறியப்பட்டிருப்பதாகவும் Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.
Taman Desa சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய ஆடவர் மற்றொரு வாகனத்தை உரசியதால் இரு வாகனமோட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கோபமடைந்த விபத்தை ஏற்படுத்திய 27 வயது இளைஞர் தம்மிடம் இருந்த போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய 27 வயது இளைஞரையும் அவருடன் இருந்த 19 வயது மற்றோர் இளைஞரையும் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து இருவரையும் விசாரித்து வருவதாகவும் Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.
Dua remaja lelaki, masing-masing berusia 27 dan 19 tahun ditahan polis kerana didakwa mengacukan pistol palsu untuk menakut-nakutkan seorang lelaki selepas insiden bergesel kereta di Taman Desa, Kuala Lumpur. Polis sahkan pistol itu adalah replika.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *