டீ குடிப்பவரா நீங்க! அப்ப இது உங்களுக்கான தகவல்!

top-news
FREE WEBSITE AD

நம்மில் பல பேர் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று டீ.தங்களது காலைப்பொழுதை சுவையான டீயுடன் தொடங்கவே பல பேர் விரும்புகின்றனர்.டீயின் சுவைக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி கிடக்கின்றனர்.டீ குடிப்பதால் உடல் புத்துணர்வு பெறுகிறது என்பதை பலரும் நம்புகின்றனர்.டீ குடிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் அதே நேரம்  இதை அதிக நேரம் கொதிக்க வைத்து குடித்தால் ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும்.

மூலிகை டீ தூளில் தயாரிக்கப்படும் டீயை குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.ஆனால் டீயில் அதிக சர்க்கரை சேர்த்து குடித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.அது மட்டுமின்றி உடல் எடை அதிகரித்துவிடும்.அதேபோல் டீயை ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைத்து குடித்தால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க வைக்கப்படும் டீ செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.வாயுத் தொல்லை,வயிறு வீக்கம் மற்றும் வயிறு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.டீயை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதால் அதன் இயற்கை சுவை மாறி கசப்பு சுவை உண்டாகும்.நீண்ட நேரம் கொதிக்க வைத்த டீ அதன் ஊட்டச்சத்து மற்றும் வாசனைகளை இழந்துவிடும் என்பதால் 3 முதல் 4 நிமிடங்களுக்குள் கொதிக்க வைத்த டீயை குடிக்க வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *