கத்தார் வணிகத் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD


கத்தாரில் மலேசியாவின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு நடத்திய  வட்டமேசைக் கூட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்திக்க 30க்கும் மேற்பட்ட உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மலேசியாவின் சமீபத்திய முதலீட்டுச் சூழல் குறித்து அவர்களுக்கு அன்வார் விளக்கினார்.

மலேசியப் பொருளாதாரம், வணிகச் சூழல் அமைப்பு மற்றும் புதிய தொழில்துறை மாஸ்டர் பிளான் 2030 குறித்து  சுமார் ஒரு மணி நேரம் அன்வார் அவர்களோடு செலவிட்டார்.

சாத்தியமான முதலீடுகளை ஈர்ப்பது உட்பட, மலேசியாவிலிருந்து அதிகமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு கத்தார் வணிக சமூகத்தை ஈர்க்கும் விதத்திலும் இச்சந்திப்பு அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவும் கத்தாரும் இந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தின் 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றன.

கடந்த ஆண்டு, கத்தாருடன் மலேசியாவின் மொத்த இருதரப்பு வர்த்தகம் RM4.2 பில்லியனாக இருந்தது.

மலேசியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் கத்தார் விளங்குகிறது.

ஜனவரி முதல் மார்ச் 2024 வரை, கத்தார் உடனான மலேசியாவின் மொத்த வர்த்தகம் 178.4% அதிகரித்து 303.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாக  இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, கத்தார் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை அதன் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *