மூன்று நாடுகளுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை பிரதமர் அன்வார் தொடங்கினார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 2-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்கான தொடர் அதிகாரப்பூர்வப் பயணத்தைத் நேற்று தொடங்கினார்.

பிரதமர் அன்வார் மலேசிய குழுவினரோடு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இத்தாலி புறப்பட்டார்.இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் அன்வார் முதல் முறையாக அங்குச் செல்கின்றார்.

இத்தாலிக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தொடங்கும் பிரதமரின் இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உலக அளவில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மலேசியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ரோம், பாரிஸ் மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய மூன்று முதன்மை பொருளாதார மையங்களுக்கான பிரதமர் அன்வாரின் வருகை அந்தந்த நாடுகளுடனான அரசத் தந்திர உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளும் கடந்த ஆண்டுவெ.50.91 பில்லியன்மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகத்தைப் பதிவு செய்தன.இந்தப் பயணம் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இத்தாலிக்கான மலேசிய தூதர் டத்தோ ஜாஹித் ரஸ்தாம் கூறினார்.

Perdana Menteri Anwar Ibrahim memulakan lawatan rasmi ke Itali, Perancis dan Brazil bagi mengukuhkan hubungan dua hala serta kerjasama ekonomi. Lawatan ini dijangka memperkukuh hubungan diplomatik dan perdagangan antara Malaysia dengan ketiga-tiga negara tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *