RM 200,000 மதிப்பிலான மின் சிகரெட்டுகள் பறிமுதல்! ஆடவர் கைது!

top-news

ஜூன் 26,


தேசிய எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த 30 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தும்பாட் Taman SBJ Putraவில் உள்ள வணிகக் கடையில் இச்சோதனையை மேற்கொண்டதாகவும் சுமார் RM 200,000 மதிப்பிலான மின் சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரி ய வந்துள்ளது. 

சம்மந்தப்பட்ட வணிகத்தலம் தும்பாட் மாவட்டக் கழகத்திற்குச் சொந்தமானது என்றும் சம்மந்தப்பட்ட வளாகம் முறையான ஒப்புதலின்றி செயல்பட்டு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் 974 திரவப் பாக்கெட்டுகளௌம் 777 மின்சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வணிகத்தை நடத்தி வந்த 30 வயது உள்ளூர் ஆடவரையும் கைது செய்துள்ளதாக தேசிய எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவான PGA தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மேலதிக விசாரணைக்காகத் தும்பாட் மாவட்டக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


PGA menahan seorang lelaki tempatan berusia 30 tahun di Taman SBJ Putra, Tumpat kerana menjalankan perniagaan rokok elektronik tanpa kelulusan. Rokok dan cecair vape bernilai RM200,000 dirampas daripada premis yang beroperasi secara haram.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *