அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு நியாயமான வெகுமதி! - பிரதமர்
- Tamil Malar (Reporter)
- 04 May, 2024
இரண்டு நாள்களுக்கு
முன்பு அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கடுமையான நிதி
நிர்வாகத்தின் மூலம் அமல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராக இருக்கும்
அன்வார், டிசம்பரில்
இருந்து நடைமுறைக்கு வரும் இந்த உயர்வுத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் RM10
பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், சம்பள சீரமைப்பு, ஒழுக்கமான நிதி மேற்பார்வையால் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார்.
நமது நாட்டின் RM1.5
டிரில்லியன் கடன் மற்றும் 5.6%
பற்றாக்குறையுடன், இந்த
ஆண்டு 5%
ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அடுத்த ஆண்டு, இந்த சம்பள உயர்வை எவ்வாறு தொடரலாம்? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தேசத்தின் நிதி
நிர்வாகத்தின் மீது நாம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியும் என்பதே இதற்குக்
காரணம்," என்று அவர் நேற்றிரவு பெர்கம்புங்கன் சுன்னாவின் 9வது தொடர் நிகழ்ச்சியில்
தனது முக்கிய உரையில் கூறினார்.
அரசு ஊழியர்களின்
சம்பளத்தை உயர்த்துவதற்கான முடிவு நியாயமான வெகுமதி என்றும், அவர்களின் கடமைகள்
மற்றும் ஒழுக்கம் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர்
கூறினார்.
அவர்களுக்கு நியாயமான
வெகுமதி வழங்கப்படாவிட்டால், விடாமுயற்சியுடன் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய
அவர்களின் புரிதலை நாம் எவ்வாறு மேம்படுத்துவது, காவல்துறை மற்றும் இராணுவ ஒழுக்கத்தை எப்படிப்
பேணுவது? எனவே, இது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு எனக்கு
இருக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *