போலி தொலைப்பேசி அழைப்பால் மிரட்டப்பட்ட பெண் RM62,000 இழந்துள்ளார்!

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
போலியான தொலைப்பேசி அழைப்பால் மிரட்டப்பட்ட 19 வயது இளம்பெண் தனது வீட்டிலிருந்த RM62,000 பணத்தை மோசடிக் கும்பலிடம் இழந்துள்ளார். நேற்று மாலை தனது தந்தையின் கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பைப் பெற்றதும் உண்மை என நம்பி அந்த பணத்தை வழங்கியதாகப் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகப் பெசூட் மாவட்டக் காவல் ஆணையர் Azamuddin Ahmad@Abu தெரிவித்தார். தொலைப்பேசியில் காவல் அதிகாரி போல மிரட்டியதால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தியதாகப் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொலைப்பேசியில் பேசிய ஆடவர் தன்னைக் காவல் அதிகாரி என்றும் தந்தையின் மீது RM25,000 மதிப்பிலான சம்மன்கள் இருப்பதாகவும் கைது செய்யப்பட்டால் தூக்குத் தண்டனை வழங்கப்படும் என்பதால் நீதிமன்றத்தில் உன் தந்தையை ஆஜர்ப்படுத்தும் முன்னரே வங்கி எண்ணில் RM62,000 பணத்தைச் செலுத்தும்படியும் மிரட்டியதால் தானும் வீட்டிலிருந்த பணத்தைச் சேகரித்து அந்த வங்கியில் செலுத்தியதாகவும் மேலும் பணம் வேண்டும் என மிரட்டியதால் அம்மாவின் தங்க நகையை எடுத்ததாகவும் அதன்பின்னரே தாம் சுதாரித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Seorang remaja perempuan berusia 19 tahun kehilangan RM62,000 selepas terpedaya dengan panggilan telefon palsu yang mendakwa dirinya sebagai pegawai polis dan menuduh ayahnya terlibat jenayah. Mangsa membuat laporan selepas menyedari ditipu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *