LPG தில்லு முல்லு! 4500 சிலிண்டர்கள் பறிமுதல்!

- Shan Siva
- 02 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 2: மானிய விலையில்
வழங்கப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து
ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜாலான் ஈப்போவில் உள்ள ஒரு
கிடங்கில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) நடத்திய சோதனையில் மொத்தம் 4,500 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்
செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோலாலம்பூர் KPDN இயக்குனர் முகமது சப்ரி செமான் தெரிவித்தார்.
இருப்பினும், தொடர்ச்சியான
கண்காணிப்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருப்பது தெரியவந்தது.
இந்த கும்பல் மானிய விலையில் கிடைக்கும் LPG சிலிண்டர்களை 14 கிலோ வீட்டு சிலிண்டர்களில் இருந்து 50 கிலோ தொழில்துறை சிலிண்டர்களுக்கு மாற்றியதாக நம்பப்படுகிறது
ஒரு யூனிட்டுக்கு RM22 க்கு வாங்கப்பட்ட
மானிய விலை எரிவாயு,
RM180 முதல் RM240 வரை தொழில்துறை
சிலிண்டர்களில் மாற்றப்பட்டு மீண்டும் விற்கப்பட்டதாக அவர் கூறினார்.
பல்வேறு அளவுகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4,500 சிலிண்டர்களின் மதிப்பு RM400,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
KPDN merampas 4,500 silinder LPG bernilai RM400,000 di Jalan Ipoh selepas risikan sebulan. LPG bersubsidi disalahguna dengan dipindah ke silinder industri dan dijual RM180–RM240. Aktiviti ini berlaku semula walaupun pernah diserbu pada Ogos lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *