SEAT BELT அணியாத 16 பேருந்து பயணிகளுக்கு அபராதம்!

- Sangeetha K Loganathan
- 02 Jul, 2025
ஜூலை 2,
நேற்று முதல் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் SEAT BELT அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கெடா மாநிலச் சாலை போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட சோதனையில் SEAT BELT அணியாத 16 பேருந்து பயணிகளுக்குத் தலா RM300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு கெடா மாநில சாலை போக்குவரத்து ஆணையம் 18 பேருந்துகளைச் சோதனையிட்டதாகக் கெடா மாநிலச் சாலைப்போக்குவரத்து ஆணைய இயக்குநர் Stien Van Lutam தெரிவித்தார்.
14 விரைவுப் பேருந்துகளையும் 4 சுற்றுலா பேருந்துகளையும் சோதனையிட்டதாகவும் 18 வயதுக்குற்பட்ட இருவருக்கு மட்டும் அபராதம் விதிக்காமல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் 16 பயணிகளுக்குத் தலா RM300 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கெடா மாநிலச் சாலைப்போக்குவரத்து ஆணைய இயக்குநர் Stien Van Lutam தெரிவித்தார். சோதனையின் போது பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த SEAT BELT பழுதடைந்திருப்பதையும் அதிகாரிகள் உறுதிச் செய்த நிலையில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்திற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டிருப்பதாக கெடா மாநிலச் சாலைப்போக்குவரத்து ஆணைய இயக்குநர் Stien Van Lutam தெரிவித்தார்.
Sejak pemakaian tali pinggang keledar diwajibkan bagi semua penumpang bas, JPJ Kedah memeriksa 18 bas dan mengeluarkan saman RM300 setiap seorang kepada 16 penumpang yang gagal memakainya. Dua penumpang bawah umur hanya diberi amaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *