நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து சாகசம் செய்த வாகனங்கள்! காவல்துறை விசாரணை!

top-news

ஜூலை 3,


நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மற்ற வாகனங்களை மறித்து சாகசம் செய்யும்படியான காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியது. சம்மந்தப்பட்ட 3 வாகனங்களும் நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் சாகசம் செய்ததாக நம்பப்படுகிறது. சம்மந்தப்பட்ட காணொலியின் மூலமாகக் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக Rembau, மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார். இச்சம்பவத்தில் 3 வாகனங்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் 3 வாகனங்களையும் காவல்துறை அடையாளம் கண்டிருப்பதாகவும் Rembau, மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார்.  

இச்சம்பவம் நேற்று பிற்பகல் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் Pedas Linggi அருகில் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலைகளை மறித்து பிற வாகனங்களுக்கு அபாயத்தை விளைவிக்கும் இது மாதிரியான பொறுப்பற்ற வாகனமோட்டிகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என Rembau, மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain தெரிவித்தார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாகனமோட்டிகள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கும்படி Rembau, மாவட்டக் காவல் ஆணையர் Hasani Hussain வலியுறுத்தினார்.


Tular video tiga kenderaan sengaja memberhentikan kenderaan di tengah Lebuhraya Utara-Selatan berhampiran Pedas Linggi untuk aksi bahaya, menyekat laluan pengguna lain. Polis Rembau sudah membuka kertas siasatan dan kenal pasti ketiga-tiga kenderaan terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *