RM1.72 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட 9 பேர் கைது!

top-news

ஜூலை 5,


ஜொகூரில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனை ஈடுபட்டதாக நம்பப்படும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியைப் போதைப்பொருள் பதுக்கி வைக்கும் கிடங்காகவும் உல்லாச மையமாகவும் நடத்தி வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து இந்த கும்பல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.

சோதனையில் SYABU, EKSTASI, KETAMIN வகையிலான போதைப்பொருள்களுடன் நகைகளும் ரொக்கப்பணமும் சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM1.72 மில்லியன் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களின் மதிப்பு RM190,205 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 21 முதல் 64 வயதினர் என்றும் 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளூர்வாசிகள் என்றும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், 2 வியட்னாமிய பெண்கள், ஒரு லாவோஸ் பெண் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட 9 பேரும் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகவும் முந்தைய போதைப்பொருள் குற்றங்களில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.


Polis Johor menahan 9 individu termasuk wanita tempatan, warga Singapura, Vietnam dan Laos dalam serbuan di kondominium mewah dipercayai digunakan sebagai pusat simpanan dan pesta dadah. Dadah bernilai RM1.72 juta serta aset bernilai RM190,205 dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *