MyKiosk ஊழல்! விசாரணையைத் தொடங்கிய SPRM!

top-news

ஜூலை 2,


MyKiosk எனும் மலிவு விலையிலான வணிகக் கடைகள் தொடர்பாக ஊழல் புகார்களைப் பெற்ற லஞ்ச ஊழல் தடுப்பு தற்போது விசாரணையைத் தொடங்கியிருப்பதாக SPRM புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Zainul Darus தெரிவித்தார். உள்ளாட்சி வீட்டு வசதி அமைச்சின் கீழ் தொழில்முனைவோருக்காக வழங்கப்படும் இந்த MyKiosk எனும் மலிவு விலையிலான வணிகக் கடைகள் திட்டத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கடந்த மே மாதம் MCA கட்சியினர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் இந்த விசாரணையைத் தொடங்கியிருப்பதாக SPRM புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Zainul Darus தெரிவித்தார்.

MyKiosk திட்டத்தில் அதன் குத்தகைகளிலும் அதன் தயாரிப்பிலும் நிதி முறைகேடு நிகழ்ந்திருப்பதாகப் புகார் பெற்றிருப்பதாகவும் புகாரில் இணைக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் சந்தேகத்திற்குரிய சில நிறுவனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என SPRM புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Zainul Darus தெரிவித்தார்.


SPRM memulakan siasatan terhadap dakwaan rasuah dalam projek MyKiosk, kios niaga berharga rendah di bawah KPKT. Aduan MCA mendakwa berlaku penyelewengan dalam pemberian sewa dan pembekalan. Beberapa syarikat sedang disiasat berdasarkan bukti yang dikemukakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *