SST குறித்து தவறானக் கருத்துகளைப் பரப்பாதீர்! அன்வார் எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 30 Jun, 2025
ஜூன் 30,
விற்பனை சேவை வரியான SST விரிவாக்கத்தால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகத் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim எச்சரிக்கை விடுத்துள்ளார். SST வரி விரிவாக்கம் என்பது பொதுமக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கும் சிலர் அடிப்படை சிக்கல் அறியாதவர்கள் என அன்வார் தெரிவித்தார். SST வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் இது விற்பனையில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களுக்கானது என்றும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
SST வரி விரிவாக்கத்தால் மின் கட்டணம் வணிகத் தலங்களுக்கு உயர்த்தப்படிருப்பதாகவும் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim விளக்கமளித்தார். வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் வணிகத் தலங்களுக்கும் அதே கட்டணத்தில் வழங்கப்படுவதில் நியாயமில்லை. மேலும் பல்கலைக்கழகங்களில் மின்சாரக் கட்டணத்திற்காக மாணவர்களிடம் தனியாகக் கட்டணம் பெறுவது குறித்து விசாரணையை மேற்கொள்வதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim menegaskan SST hanya memberi kesan kepada premis perniagaan, bukan pengguna biasa. Beliau mengingatkan supaya tidak menyebar maklumat palsu kononnya SST menaikkan bil elektrik rumah. Kerajaan akan siasat universiti yang kenakan caj elektrik pada pelajar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *