SST வரி விரிவாக்கம் அன்றாடத் தேவையைப் பாதிக்காது! – நிதி அமைச்சு விளக்கம்!

top-news

ஜூலை 4,


மக்களின் அன்றாடத் தேவைகளை SST வரி விரிவாக்கம் எந்த வகையிலும் பாதிக்காது என நிதியமைச்சு உறுதியளித்துள்ளது. வணிகம் தொடர்பானவற்றுக்கு மட்டுமே SST வரி விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அடிப்படைத் தேவைகளின் விலைகளின் SST வரி விரிவாக்கத்தின் தாக்கம் இருக்காது என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது SST வரி விரிவாக்கத்தால் ஒரு சில தங்கும் விடுதிகளின் கட்டணம் அதிகரித்துள்ளதையும் நிதி அமைச்சு அறிந்திருக்கிறது என்றும் ஆனால் தங்கும் விடுதிகளின் விலை அதிகரித்தால் அதற்கேற்ப SST வரியும் அதிகரிக்குமென நிதி அமைச்சு வலியுறுத்தியது.

SST வரி விரிவாக்கத்தால் 10% முதல் 15% மட்டுமே தங்கும் விடுதிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி விரிவாக்கத்தால் அனைத்து தங்கும் விடுதிகளும் அதன் அடிப்படை கட்டணத்தை உயர்த்தினாலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு ஏற்ப SST வரியும் உயரும் என்பதைத் தங்கும் விடுதிகள் உணர வேண்டும் என்றும் நிதி அமைச்சு வலியுறுத்தியது. மேலும் வரி ஏய்ப்பு செய்யும் வகையில் மலிவு விலையிலான தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் உயர்ந்தால் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவீனத்துறையின் (KPDN) மூலமாகச் சம்மந்தப்பட்ட தங்கும் விடுதி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Kementerian Kewangan menegaskan peluasan cukai SST tidak akan menjejaskan keperluan harian rakyat kerana ia hanya tertumpu kepada aktiviti perniagaan. Kenaikan kadar SST bagi hotel hanya melibatkan penyesuaian caj mengikut kadar asas yang ditetapkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *