ஜிஆர்எஸ் கூட்டணியிலிருந்து ஸ்டார் வெளியேறுகிறதா?- வதந்தி என்கிறது ஜிஆர்எஸ்!

- Muthu Kumar
- 04 Jul, 2025
கோத்தாகினபாலு, ஜூலை 4-
சபா மாநில ஆளும் காபுங்ஙான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து வெளியேற ஸ்டார் எனப்படும் சோலிடரிட்டி தானா ஆயர்கூ கட்சி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை அக்கூட்டணி மறுத்திருக்கிறது.
ஜிஆர்எஸ் கூட்டணியை விட்டு தமது கட்சி வெளியேறும் என்று ஸ்டார் கட்சித் தலைவர் ஜெஃப்ரி கிட்டிங்ஙான் கூறிருப்பதாக கூறப்படும் ஒரு காணொளி தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அத்தகைய ஒரு காணொளி பகிரப்பட்டு வருவதை ஒப்புக் கொண்ட ஜிஆர்எஸ் தகவல் பிரிவுத் தலைவர் ஜோனிஸ்தன் பங்குவாய், ஜிஆர்எஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும், ஜெஃப்ரி உட்பட அனைத்து எட்டு உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை ஜிஆர்எஸ் தலைவர் ஹஜிஜி நோரை சந்தித்ததாகக் கூறினார்.
ஜிஆர்எஸ்சை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அந்த எட்டு தலைவர்களும் அக்கூட்டத்தின்போது உறுதிப்படுத்தியதாகவும் எதிர்வரும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜிஆர்எஸ் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் ஜோனிஸ்தன் தெரிவித்தார்.
"அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றனர். ஒற்றுமையுடன் இருப்பதோடு, ஜிஆர்எஸ்சை வலுப்படுத்தப் போவதாகவும் அவர்கள் ஏகமனதாக முடிவு செய்தும் இருக்கின்றனர். இவையெல்லாம் ஜிஆர்எஸ் தலைவர் ஹஜிஜி தலைமையிலான அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது' என்று எஃப்எம்டியிடம் அவர் தெரிவித்தார். ஹஜிஜியை தலைவராகக் கொண்டிருக்கும்
காகாசான் ரக்யாட் சபா, பார்டி பெர்சத்து சபா (பிபிஎஸ்) மற்றும் ஸ்டார் ஆகியவை உட்பட மொத்தம் எட்டு கட்சிகள் ஜிஆர்எஸ்சில் உறுப்புக் கட்சிகளாக இருக்கின்றன.
சபா சட்டசபையில் காகாசான் ரக்யாட் சபா கட்சி 26 தொகுதிகளையும் பிபிஎஸ் ஏழு தொகுதிகளையும் ஸ்டார் ஆறு தொகுதிகளையும் கொண்டிருக்கின்றன.
இதனிடையே, சபா மாநில துணை முதலமைச்சருமான ஜெஃப்ரி கிட்டிங்ஙான் தோன்றி இருப்பதாகக் கூறப்படும் காணொளியில் அவர், "ஜிஆர்எஸ்சை விட்டு நாங்கள் வெளியேற விருக்கிறோம். ஆனாலும் தொடர்ந்து மாநில அரசாங்கத்தில் இருந்து வருவோம் என்று கூறுவதை கேட்க முடிந்தது.
உண்மையில் அக்காணொளியில் இடம் பெற்றிருந்த உரையாடல் மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுக்கள் அகற்றப்பட்டிருப்பதாக, ஸ்டார் கட்சியின் தகவல் பிரிவின் துணைத் தலைவர் அர்டினோ டிரிஸ் தெரிவித்தார்.
Gabungan Rakyat Sabah (GRS) menafikan khabar angin Parti STAR ingin keluar gabungan tersebut. Semua lapan pemimpin parti komponen, termasuk Jeffrey Kitingan, berikrar kekal bersama GRS serta bersatu untuk menghadapi pilihan raya negeri Sabah akan datang demi memastikan kemenangan besar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *