ஓஹோ ஆடி மாதத்தில் கணவன் மனைவி பிரிந்து இருப்பதற்கு இதுதான் காரணமா!

top-news
FREE WEBSITE AD

 ஆடி மாதத்தில் விரதங்கள் இருப்பது, வழிபாடுகள் செய்வது, கோயில்களில் விழாக்கள் நடத்துவது போன்றவை நடந்து கொண்டே இருக்கும். ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதமாக கருதப்பட்டாலும், இம்மாதம் முழுவதும் இறைவனைத் தவிர வேறு எதையும் நினைக்க கூடாது என்பதால், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் நடத்தப்படுவதில்லை. திருமணம் ஆனவர்களையும் ஒரே வீட்டில் இல்லாமல் பிரித்து வைக்கிறார்கள். அவர்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக் கூடாது. அது ஏன் என்று தெரியுமா..? இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஆடி மாதம் முழுவதும் இறைவனை முழு மனதுடன் வழிபடுவதால், திருமணமானவர்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக் கூடாது. இதனால்தான் இன்றும் பல கிராமப்புறங்களில் ஆடி மாதம் தொடங்கியதுமே புதுப்பெண்ணை அவளது பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். ஏனென்றால், ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் என்பது வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதம் பிரசவத்திற்கு ஏற்ற மாதம் அல்ல.

ஒருவேளை அப்படி குழந்தை பிறந்தால், அது பிறக்கும் குழந்தைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் ஆரோக்கியத்தின் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் தான், பெற்றோர்கள் ஆடி மாதம் பிறந்தவுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று சீர்வரிசைகளை கொடுத்து விட்டு, தங்களது பெண்ணை கையோடு வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் இன்றும் கூட ஆடி மாதம் முழுவதும் திருவிழாக்கள், விசேஷங்கள் நடத்திக் கொண்டாடி மகிழ்வார்கள்.

மேலும், இந்த மாதத்தில் கிராம மக்கள் தங்களது கைகளில் காப்பு கட்டி சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவார்கள். இதனால் தான் திருமணமானவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு தங்களது மனதை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதுபோல, திருமணம் என்றால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே, அந்த காலத்தில், உழவு தொழில் முக்கியமான தொழிலாக இருப்பதால் விவசாயத்திற்கு ஒதுக்கி வைத்த பணத்தை திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு செலவழித்து விட்டால், வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், ஆடி மாதத்தில் சுப காரியங்கள் ஏதும் வைப்பதில்லை என்று கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *