போதைப்பொருள் கடத்திய தம்பதியர் குடும்பத்துடன் கைது!

top-news

ஜூன் 27,

நேற்றிரவு காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டதில் போதைப்பொருளுடன் கணவன் மனைவி இருவரும் அவர்களின் குழந்தையும் கைது செய்தனர். நேற்றிரவு 10.18 மணியளவில் பொன்தியானில் உள்ள JALAN SUNGAI GURAP சாலையில் சந்தேகத்திற்குரிய NISSAN ALMERA வாகனத்தைக் காவல்துறையினர் நிறுத்த முயன்றதாகவும் வாகனமோட்டி வாகனத்தை நிறுத்தாததால் சுமார் 15 கிலோ மீட்டர் வாகனத்தைத் துரத்தி மடக்கியதாகவும் PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் MOHAMAD SHOFEE TAYIB தெரிவித்தார். 


வாகனத்திலிருந்து 8.58 கிராம் SYABU வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 32 வயது உள்ளூர் ஆடவரும் அவரின் மனைவி என நம்பப்படும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டதாகவும் வாகனத்திலிருந்த 2 வயது குழந்தையும் மீட்கப்பட்டிருப்பதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் MOHAMAD SHOFEE TAYIB தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக PONTIAN மாவட்டக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் MOHAMAD SHOFEE TAYIB தெரிவித்தார்.

Sepasang suami isteri ditahan bersama anak mereka selepas cuba melarikan diri daripada polis di Pontian. Mereka dikesan memiliki 8.58 gram syabu dalam kereta. Pasangan itu kini direman untuk siasatan lanjut, anak mereka diselamatkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *