தீவிரவாதக் கொள்கையைப் பரப்பிய 36 வெளிநாட்டினர் மலேசியாவில் கைது!

- Sangeetha K Loganathan
- 27 Jun, 2025
ஜூன் 27,
மலேசியா எந்தவொரு கிளர்ச்சி படைக்கும் ஆதரவான நாடு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும் என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismai நினைவூட்டினார். முன்னதாக Bangladesh நாட்டைச் சேர்ந்த 36 பேர் அவர்களின் நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கு மலேசியாவில் திட்டங்களைத் தீட்டி வந்ததாகச் சிலாங்கூர் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டதை Datuk Seri Saifuddin Nasution Ismai சுட்டிக்காட்டினார். ideologi Islamic State (IS) போன்ற கொள்கைகளை மலேசியாவில் பரப்ப பல்வேறு ரகசிய கூட்டங்களை அவர்களை நடத்தியதாகவும் இங்குள்ள மலேசியர்களிடம் அந்த கும்பல் நிதியைத் திரட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாகத் தேசிய உளவுத் துறை கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் உடனடியாக ஏப்ரல் 24 காவல்துறையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டு மலேசியா முழுவதும் சோதனைகளை மேற்கொண்டு 36 Bangladesh ஆடவர்களைக் கைது செய்திருப்பதாகவும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismai விளக்கமளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் 15 பேர் நாடு கடத்தப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismai தெரிவித்தார்.
Seramai 36 warga Bangladesh ditahan di Selangor dan Johor kerana menyebarkan ideologi pelampau serta merancang tindakan terhadap kerajaan negara asal mereka. Serbuan dilakukan selepas risikan mendapati mereka turut mengutip dana dari rakyat tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *