RM3.2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பெண்களும் 3 ஆண்களும் கைது!

- Sangeetha K Loganathan
- 03 Jul, 2025
ஜூலை 3,
ஜொகூர் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் உள்ளூர் ஆடவர்கள் என்றும் இருவர் வியட்னாமிய பெண்கள் என்றும் அனைவரும் 29 முதல் 46 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கும்பல் ஜொகூரின் பல்வேறு பகுதிகளுக்குப் போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சோதனை நடவடிக்கையில் 16,865 gram ekstasi, 104 gram ketamine, 548 gram Erimin மாத்திரைகள், 35 yaba மாத்திரைகள் 5 சொகுசு வாகனங்கள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் 59,971 பேர் பயன்படுத்தலாம் என்றும் கணிக்கப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்டவையின் மொத்த மதிப்பும் RM3.2 மில்லியன் என கணக்கிடப்படிருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் சிலரையும் காவல்துறையினர் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களையும் கண்காணித்து வருவதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.
Polis Johor menahan lima individu termasuk tiga lelaki tempatan dan dua wanita Vietnam berusia 29 hingga 46 tahun bersama dadah bernilai RM3.2 juta. Dadah seperti ekstasi, ketamin, Erimin, yaba serta lima kenderaan mewah turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *