கிள்ளான் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இருவர் கைது!

top-news

ஜூலை 1,


கிள்ளான் மேரு சாலையில் வாகனத்தின் மீது குண்டர் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞரும் 40 வயது ஆடவரும் குண்டர் கும்பலின் உறுப்பினர்கள் என முதற்கட்ட விசாரணையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கொலை செய்யப்பட்ட 46 வயதான உள்ளூர் நபர் தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மற்றொரு குண்டர் கும்பலில் அவர் தீவிரமாக இருந்ததால் தெளிவான திட்டமிடலுக்குப் பின்னரே அவர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியிருப்பதாகக் கைது செய்யப்பட்ட இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக Datuk Hussein Omar Khan தெரிவித்தார். உயிரிழந்த 46 வயது ஆடவர் எந்த குண்டர் கும்பலுடன் தொடர்புடையவர் என்பதைக் காவல்துறை விசாரித்து வருவதாகவும் மேலதிக விசாரணையில் சம்மந்தப்பட்ட இரு வெவ்வேறு குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்படுவார்கள் என Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.


Seorang ahli perniagaan tempatan berusia 46 tahun mati ditembak di Jalan Meru, Klang dipercayai akibat persengketaan kumpulan kongsi gelap. Dua lelaki masing-masing berusia 25 dan 40 tahun ditahan polis kerana disyaki terlibat dalam kes pembunuhan ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *