ஜொகூரில் துப்பாக்கிச் சூடு! – காவல்துறை விசாரணை!

top-news

ஜுலை 5,


எரிவாயு நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த வாகனத்தைக் கும்பலொன்று பாராங்கத்தியால் தாக்கும்படியும் தாக்கப்படும் வாகனத்திலிருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M. Kumarasan தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த ஜூலை 3 ஆம் நாள் நள்ளிரவு 12.11 மணிக்கு ஜொகூரில் உள்ள BANDARAYA SHELL நிலையத்தில் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்மந்தப்பட்ட SHELL நிலையத்திலிருந்த CCTV மறைக்காணியில் இச்சம்பவம் பதிவாகியிருப்பதாகவும் பாராங்கத்தியால் தாக்குதலைத் தொடங்கிய கும்பல் முகமூடி அணிந்திருந்ததால் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும் துப்பாக்கிச் சூடு நடத்திய வாகனத்திலிருந்த மூவரின் அடையாளம் CCTV மறைக்காணியில் பதிவாகியிருப்பதால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமென்றும் Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M. Kumarasan தெரிவித்தார். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்க பெறாத நிலையில் சம்மந்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M. Kumarasan தெரிவித்தார்.

Polis Johor sedang menyiasat insiden pergaduhan di stesen minyak BANDARAYA Shell, Iskandar Puteri, di mana sekumpulan lelaki bersenjatakan parang menyerang sebuah kereta. Tiga individu dalam kereta itu membalas dengan melepaskan tembakan. Polis kini kenal pasti suspek melalui rakaman CCTV.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *