என் மீது குற்றம் சுமத்தப்பட்டபோதே அரசியலிலிருந்து விலகிவிட நினைத்தேன்!

- Muthu Kumar
- 02 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 2-
தமக்கு எதிராக ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதே, அரசியலை விட்டு விலகி விடுவது குறித்து தாம் பரிசீலித்ததை. மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும், தமது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை நீதிமன்றத்தில் போக்க வேண்டும் என்பதற்காக. அத்தகைய முடிவை தாம் மாற்றிக் கொண்டதாக. முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான சைட் சாடிக் தெரிவித்தார்."அவ்வாறு செய்ய நான் நினைத்ததே இல்லை என்று நான் கூறினால் அது பெய்யான ஒன்றாக இருக்கும் என்று. நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை வழங்கிய ஒரு பேட்டியில் அவர் கூறினார்.
''ஆயினும், ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பதை எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்.அதாவது நாட்டுக்கு சேவை செய்ய, மலேசியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் முன்னேற்றகரமான மலேசியாவுக்கு உதவுவதே எனது நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தினால் இரண்டு கல்வி உபகாரச் சம்பளங்கள் தமக்கு வழங்கப்பட்டபோது. அரசியலில் இருந்து தாம் விலகியிருக்கலாம். அப்போது தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக்கூட இல்லை என்றும் அரசாங்கமும் மாற்றப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.ஆனால், நாடுதான் எப்போதும் முதலில் வர வேண்டும் என்று நான் நினைத்தேன் என்று சைட் சாடிக் கூறினார்.
நம்பிக்கை மோசடி, சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சைட் சாடிக் ஒரு குற்றவாளி என்று, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரின் தீர்ப்பளித்திருந்தது.அத்தீர்ப்பை எதிர்த்து அவர் முறையீடு செய்தார். பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுக்குச் சொந்தமான 10 லட்சம் வெள்ளியையும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியையும் முறைகேடு செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து சைட் சாடிக்கை மேல்முறையிட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை விடுதலை செய்திருந்தது.
நிதி கையாடல் மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி கண்டதினால், தம்மை தற்காத்துக் கொள்ள சைட் சாடிக் அழைக்கப்பட்டிருக்கக் கூடாது என்று, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நோர்டின் படாருடின் தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
Saiyed Saddiq mengakui pernah pertimbang undur diri dari politik semasa dituduh rasuah dan pengubahan wang haram. Namun, beliau nekad bersihkan nama di mahkamah demi perjuangan untuk rakyat. Beliau akhirnya dibebaskan selepas rayuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *