தெலுக் இந்தான் தொகுதியை ஙாவிடமிருந்து பெரிக்காத்தான் பறிப்பது அவ்வளவு எளிதல்ல!

- Muthu Kumar
- 04 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 4-
ஜசெகவின் ஙா கோர் மிங்கிற்கு ஈடான ஒருவரை களமிறக்காத வரையில், தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை அவரிடமிருந்து பெரிக்காத்தான் நேஷனலினால் நிச்சயமாக பறிக்க முடியாது. வரும் பொதுத் தேர்தலில் அத்தொகுதியைக் கைப்பற்ற வேண்டுமென்றால், பெரிக்காத்தான் நேஷனல் அவருக்கு ஈடான ஒரு வேட்பாளரை அங்கு களமிறக்க வேண்டும் என்று. மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலி கூறியுள்ளார்.
அமைப்பு மற்றும் ஊராட்சிமன்றத்துறை அமைச்சருமான ஙா, ஜசெக விசுவாசிகள் மத்தியில் வலுவான ஆதரவைப் பெற்றிருப்பதுடன், சீன சமூகத்தினர் மத்தியில் மிகவும் மதிக்கப்படக் கூடிய ஒருவராக இருந்து வருவதாகவும் மஸ்லான் தெரிவித்துள்ளார்."தெலுக் இந்தானை கைப்பற்ற வேண்டுமானால், ஙாவுக்கு
நிகரான ஒரு வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் நிறுத்த வேண்டும். அத்தகைய ஒரு வேட்பாளர் தனது உறுப்புக் கட்சியான கெராக்கானில் இருந்தால் அவரை அங்கு போட்டியிடச் செய்ய வேண்டும்.
"ஆனால், இன்றைய அரசியல் சூழ்நிலையில், ஜசெகவுடன் கெராக்கான் மோதுவது உண்மையிலேயே ஒரு சவாலான விசயமாகும். காரணம் சீன சமூகத்தினரின் ஒரு திடமான ஆதரவை ஜசெக பெற்றிருக்கிறது என்று மஸ்லான் கூறியுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் மீதான பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதன் காரணத்தினால், தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனலினால் இம்முறை கைப்பற்ற முடியும் என்று. பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி அண்மையில் கூறியிருப்பது குறித்து கருத்துரைக்கும்போது மஸ்லான் இவ்வாறு
குறிப்பிட்டார்.
தெலுக் இந்தான் தொகுதியை தற்போது ஜசெக தன் வசம் வைத்திருக்கிறது. ஆனால்,
கடந்த 2014ஆம் ஆண்டில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கெராக்கான் சுட்சித் தலைவர் மா சியூ கியோங், வெறும் 238 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜசெகவின் டயானா சோஃப்யாவை தோற்கடித்திருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டில் நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில், அத்தொகுதியில் போட்டியிட்ட ஙா 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாவை தோற்கடித்து அத்தொகுதியைக் கைப்பற்றினார்.
2022ஆம் ஆண்டில் நடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் நிலவிய நான்குமுனை போட்டியில், பெர்சத்து கட்சியின் ஸைனோல் ஃபட்ஸி பஹாருடினை ஙா தோற்கடித்து அத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 50 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 33 விழுக்காட்டினர் சீனர்கள் மற்றும் 17 விழுக்காட்டினர் இந்தியர்கள். மலாய்க்காரர்கள் சற்று பெரும்பான்மையில் இருப்பதால், தெலுக் இந்தான் தொகுதியில் வெற்றிபெற முடியும் என்று பாஸ் சுட்சி கடந்த பல காலமாக நம்பிக் கொண்டு வருகிறது.
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்-தேசிய முன்னணி கூட்டணி ஒன்றாகச் சேர்ந்து களமிறங்க விருப்பதால், கலவையான வாக்காளர்கள் இருக்கும் தெலுக் இந்தான் போன்ற தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றியை எதிர்பார்ப்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்றும் மஸ்லான் கூறினார்.
தெலுக் இந்தான் தொகுதியில் வெற்றிபெற வேண்டுமானால், மலாய்க்காரர் அல்லாத குறிப்பாக சீனர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனல் கட்டாயம் றவோண்டும். ஆனால், சீனர்களின் வாக்குகள் ஜசெக பக்கமே இருந்து வருகின்றன" என்று மஸ்லான் குறிப்பிட்டார்.
கிழக்குக்கரை மாநிலங்களில் இருப்பதுபோன்று. 70 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களை பெரிக்காத்தான் நேஷனல் தன்வசம் கொண்டிருந்தால் மட்டுமே தெலுக் இந்தான் தொகுதியை அதனால் கைப்பற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Penganalisis politik Maslan Ali menyatakan Teluk Intan sukar ditawan Perikatan Nasional tanpa calon setanding Nga Kor Ming. Nga kuat dalam kalangan pengundi Cina, manakala PN perlu tarik sokongan Cina untuk menang. Teluk Intan kekal kubu kuat DAP dalam suasana politik semasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *