TUN DAIMஇன் வெளிநாட்டுச் சொத்துகளின் மதிப்பு RM 4,500 மில்லியன்! – SPRM விளக்கம்!

top-news

ஜூன் 29,


முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவரின் வெளிநாட்டுச் சொத்துகளின் மதிப்பு RM 450 கோடி என மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். அவரிடம் இருக்கும் சொத்துகள் அவர் இறந்த பின்னர் அவரின் அடுத்த தலைமுறைக்கும் அவரின் மனைவிக்கும் பிரிக்கப்பட்டிருப்பதால் அதனை மீட்கும் முயற்சியில் இதுவரை 700 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளை மீட்டிருப்பதாகவும் இன்னும் சுமார் RM 3,800 மில்லியன் சொத்துகள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார். 

Tun Daim Zainuddinக்குச் சொந்தமான சொத்துகள் அமேரிக்கா, சிங்கப்பூர், ஜப்பார், பிரான்ஸ், ஜெர்சி என 5 நாடுகளில் இருப்பதை SPRM கண்டறிந்திருக்கும் நிலையில் இதுவரையில் அமேரிக்காவில் உள்ள அவரின் சொத்துகளைச் சோதனையிட அமேரிக்க அரசு அனுமதியளித்திருப்பதாகவும் மற்ற நாட்டு அரசாங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருப்பதாகவும் SPRM தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். Tun Daim Zainuddinக்குச் சொந்தமான சொத்துகள் மீதான விசாரணை Datuk Mohamad Zamri Zainul Abidin தலைமையில் ஒரு சிறப்புப் படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார்.


SPRM mengesahkan nilai aset luar negara milik Tun Daim Zainuddin dianggarkan RM4,500 juta, dengan RM700 juta telah dirampas. Siasatan terhadap aset di lima negara diteruskan dengan kerjasama kerajaan luar. Pasukan khas diketuai Datuk Mohamad Zamri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *