தடியுடன் வாகனமோட்டியை மிரட்டிய ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 13 Mar, 2025
மார்ச் 13,
சாலையில் இரும்பு தடியுடன் இரு வாகனமோட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவிய நிலையில் சம்மந்தப்பட்ட இரு வாகனமோட்டிகளையும் காவல்துறையினர் விசாரிக்கவிருப்பதாகவும் தடியுடன் இருந்த ஆடவர் ஒருவரைக் காவல்துறை விசாரித்துவிட்டதாகவும் தென்ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat இன்று தெரிவித்தார். சுமார் 23 வினாடிகள் கொண்ட காணொலியில் இரு வாகனங்களின் பதிவுகளைக் கொண்டு 30 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Raub Selamat தெரிவித்தார்.
ஜொகூரின் Sultan Iskandar (BSI) கட்டிடத்தின் முன் உள்ள சாலையில் இரு வாகனமோட்டிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குவாததில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தடியை வைத்திருப்பதாகவும் Raub Selamat தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள 30 வயது மீது முன்னமே 2 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட மற்றொரு நபரும் காவல்நிலையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரைவில் அழைக்கப்படுவார்கள் என Raub Selamat தெரிவித்தார்.
Seorang lelaki ditahan di Skudai selepas mengugut pengguna jalan raya dengan kayu di Lebuhraya EDL, Johor Bahru. Insiden berlaku akibat kemarahan terhadap mangsa yang memotong barisan. Suspek mempunyai dua rekod jenayah
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *