RAFIZI எல்லை மீறுகிறார்! அம்னோ வழக்கு தொடுக்கும்! எச்சரித்த அம்னோ!

- Sangeetha K Loganathan
- 30 Jun, 2025
ஜூன் 30,
முன்னாள் அமைச்சர் Rafizi Ramli தொடர்ந்து அரசாங்கத்தை விமர்சித்து வந்தால் அவர் மீது நீதிமன்ற வழக்கு தொடுக்கவும் அம்னோ தயங்காது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkashi எச்சரிக்கை விடுத்தார். பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் Rafizi Ramli தோல்வி அடைந்ததால் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன் அமைதியாக இருக்க வேண்டும். அதை விடுத்து அரசாங்கத்தைத் தேவையில்லாமல் குறை கூறி வருவதாகவும் அம்னோவின் மீதும் Rafizi Ramli அவதூறுகளைப் பரப்புவதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkashi தெரிவித்தார்.
அவருக்குக் கட்சிக்குள் பிரச்சனை என்றால் கட்சி உறுப்பினர் கூட்டத்தில் வாய்க்கு வந்ததைப் பேசட்டும். ஒற்றுமை கூட்டணியின் ஆட்சியில் இருந்து விட்டு கூட்டணிக் கட்சிகளுக்குக் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பதை அம்னோ பொறுத்துக்கொள்ளாது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkashi தெரிவித்தார். தலைமைக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பது அடிப்படை உறுப்பினருக்கான விதி. அதை Rafizi Ramli மீறிவிட்டார். இனியும் அவர் அரசாங்கத்தை விமர்சித்தால் அவர் மீதி நீதிமன்ற வழக்கைத் தாம் தொடுப்பதாக Puad Zarkashi தெரிவித்தார்.
Ahli Majlis Tertinggi UMNO, Puad Zarkashi memberi amaran bahawa tindakan undang-undang akan diambil terhadap Rafizi Ramli sekiranya terus mengkritik kerajaan dan menimbulkan kekeliruan dalam parti. UMNO menegaskan Rafizi perlu patuh pada disiplin parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *