மகாதீரின் துரோகத்தை மறக்கமாட்டோம்! அம்னோ துரோகத்தால் மட்டுமே இதுவரை வீழ்த்தப்பட்டிருக்கிறது!

top-news

ஜூன் 28,


எதிர்க்கட்சி பலம் வாய்ந்துவிட்டதால் அம்னோ வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறப்படும் கருத்துகளில் உண்மையில்லை என்றும் அம்னோ துரோகத்தால் மட்டுமே காலங்காலமாக வீழ்த்தப்பட்டு வருவதாகவும் அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். அம்னோவில் ஒவ்வொரு காலத்திலும் வீழ்ந்து மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறது என்பதை Datuk Dr Asyraf Wajdi Dusuki சுட்டிக்காட்டினார் அப்படி அம்னோ வீழும் போதெல்லாம் அம்னோவை வீழ்த்தியவர்கள் எல்லாம் அம்னோவால் அரசியல் உயரத்தைத் தொட்டவர்கள் என்றும் அதில் மாபெரும் துரோகத்தை இழைத்தவர் அம்னோவின் முன்னாள் தலைவர் Tun Dr Mahathir Mohamad என வெளிப்படையாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki குற்றம்சாட்டினார்.

1969 ஆம் ஆண்டே மகாதீர் அம்னோவிலிருந்து விலகினார். அப்போதைய பிரதமரும் அம்னோ தலைவராக இருந்த Tunku Abdul Rahman-ஐ எதிர்த்து மகாதீர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அப்போது மகாதீரை யாருமே நம்பவில்லை, அதன்பின்னர் மீண்டும் அம்னோவில் மகாதீர் இணைந்தார். 1988 ஆம் ஆண்டு மகாதீரை எதிர்த்து அம்னோ தலைவராகப் போட்டியிட்ட Tengku Razaleigh Hamzah தோல்வி அடைந்ததும் அம்னோவிலிருந்து விலகினார். அப்போதும் அம்னோ பிளவைச் சந்தித்தது. ஆனால் அம்னோ பலமாகவே இருந்தது. ஆனால் 2008-இல் இதே மகாதீர் அப்போதைய பிரதமர் Datuk Seri Abdullah Ahmad Badawi அம்னோவின் தலைவர் பதவியை விட்டு விலகும் வரையில் தாம் அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதிலிருந்து தொடர்ந்து மகாதீர் அம்னோவுக்குக் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். 2016 இல் அம்னோவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மகாதீர் செயல்பட்டார். இப்படி அம்னோவின் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் மகாதீரின் துரோகம் நிறைந்திருக்கிறது. இப்போது வரையும் அம்னோ மகாதீரை எதிர்க்கவில்லை. காரணம் அவர் மீது அம்னோ மரியாதை கொண்டிருக்கிறது என Rantau Panjang அம்னோ பொதுக்கூட்டத்தில் அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.


Datuk Dr Asyraf Wajdi Dusuki menegaskan UMNO tidak pernah tumbang kerana pembangkang tetapi akibat pengkhianatan dalaman, khususnya Tun Dr Mahathir Mohamad yang didakwa memainkan peranan menjatuhkan UMNO sejak era Tunku Abdul Rahman hingga kini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *