மலாக்காவில் பாக்காத்தானுடன் பாரிசான் தேர்தல் கூட்டணி அமைக்காது!

top-news

ஜூன் 29,


பாக்காத்தானுடன் பாரிசான் இணைந்து மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும் மலாக்காவில் பாரிசான் தனித்து போட்டியிடும் என்றும் மலாக்கா மாநில அம்னோ தீர்மானத்தை நிறைவேற்றியது. பக்காத்தானும் பாரிசானும் இணைந்து ஒற்றுமை கூட்டணியை அமைத்த பிறகு முதல் முறையாக மாநில அளவில் இரு கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது மலாக்கா மாநில அம்னோ. மலாக்காவில் பாரிசான் தனித்து போட்டியிடும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அவசியமில்லை என இன்று ஜாசினில் நடைபெற்ற மலாக்கா மாநில அம்னோ பேரவையில் முடிவெடுக்கப்பட்டது. 

மலாக்காவில் 28 சட்டமன்றங்கள் உள்ளதாகவும் பக்காத்தான் பாரிசான் கூட்டணி உருவாகும் முன்னமே பாரிசான் பக்காத்தானை எதிர்த்து 21 சட்டமன்றங்களில் வெற்றிப் பெற்றிருந்ததால் மலாக்காவில் பாரிசான் தனித்து போட்டியிடும் வல்லமை பெற்றிருப்பதாக மலாக்கா மாநில முதலமைச்சரும் மலாக்கா மாநில அம்னோ தலைவருமான Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்தார். கடந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் 21 சட்டமன்றங்களையும் பக்காத்தான் 5 சட்டமன்றங்களையும் பெரிக்காத்தான் 2 சட்டமன்றங்களையும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


UMNO Melaka menegaskan Barisan Nasional akan bertanding secara bersendirian dalam pilihan raya negeri Melaka tanpa kerjasama dengan Pakatan Harapan. Keputusan ini dimuktamadkan dalam Perhimpunan UMNO Melaka di Jasin, mengekalkan kekuatan Barisan di 28 kerusi DUN.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *