மருத்துவமனை நிர்வாக மேலாளராக நியமிக்கப்பட்ட மின் சிகரெட் வணிகர் பதவி விலகினார்!

- Sangeetha K Loganathan
- 04 Jul, 2025
ஜூலை 4,
மின் சிகரெட் வணிகர் ஒருவர் அரசு மருத்துவமனையில் நிர்வாகப் பார்வையாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வெளியான கண்டனங்களைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 23 REMBAU அரசு மருத்துவமனையில் புதிதாக நியமிக்கப்பட்ட Adzwan Ab Manas எனும் நபர் மின்சிகரெட்டுகள் விற்பனையாளராக மட்டுமல்லாது மலேசிய மின்சிகரெட் சாதனத் திரவ விற்பனையாளர் சங்தத்தின் (MRECA) தலைவராகவும் பதவி வகித்து வருவதாக வெளியான குற்றச்சாட்டுகள் பாவலாக எழுந்தது.
இது சுகாதார அமைச்சின் தவறில்லை என்றும் தன்னுடைய வணிகத்திற்கும் இந்த பதவிக்கும் முரண் இருப்பதால் தாம் அப்பதவியை விட்டு விலகுவதாகவும் MRECA தலைவரான Adzwan Ab Manas தெரிவித்தார். இந்த பதவி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுகாதாரம் குறித்தான ஒரு பொறுப்பு என்பதால் தாம் அப்பதவிக்குப் பொறுப்பானவர் அல்ல என்பதை உணர்ந்து தாம் பதவியிலிருந்து விலகியிருப்பதாகவும் தன்னுடைய நியமனத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் Adzwan Ab Manas விளக்கமளித்தார்.
Adzwan Ab Manas, peniaga vape dan Presiden MRECA, meletak jawatan sebagai Pengurus Pentadbiran Hospital Rembau selepas kontroversi pelantikannya. Beliau mengakui wujud konflik kepentingan antara perniagaan vape dan jawatannya, serta menafikan kaitan KKM.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *