KKB இடைத்தேர்தல் குறைந்தபட்ச வாக்குகளில் PH வெற்றி பெறும்! – ஆய்வு மையம் கருத்து

top-news
FREE WEBSITE AD

 இன்று நடைபெறும்‌ கோல குபு பாரு சட்டமன்ற இடைத்‌ தேர்தலில்‌, பக்காத்தான்‌. ஹராப்பான்‌ குறுகிய வாக்குகளில்‌ வெற்றி பெறும்‌ என்று, இல்ஹாம்‌ மையம்‌ நடத்தியுள்ள கருத்துக்‌ கணிப்பில்‌ தெரியவந்துள்ளது.

இதில்‌, பக்காத்தான்‌ வேட்பாளர்‌ பாங்‌ சோக்‌ தாவோவுக்கும்,‌ பெரிக்காத்தான்‌ வேட்பாளர்கள்‌. 'கைருல்‌ அஸ்ஹாரிக்கும்‌ இடையேதான்‌ கடும்‌ போட்டி நிலவும்‌ என்றும்‌  அம்மையம்‌ தெரிவித்துள்ளது.  

இரண்டு வாரங்களாக நடைபெற்ற நேர்தல்‌ பிரச்சாரங்கள்‌ எதி்பார்த்தபடி அவ்வளவு "சூடாக இல்லை என்றும்,‌ வாக்களிக்க வரும்‌ வாக்காளர்களின்‌ எண்ணிக்கையைப்‌. பொறுத்துதான்‌ வெற்றி நிரணயிக்கப்படும்‌ என்றும்‌, கருத்து கேட்கப்பட்ட 404 பேரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள்‌ அழப்படையில்‌ அம்மையம் கூறியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட்‌ மாததில்‌ நடந்த சிலாங்கூர்‌ மாநில சட்டமன்றத்‌ தேர்தலின்போது மலாய்க்கார வாக்காளர்களில்‌ பெரும்பாலானோர்‌ : பெரிக்காத்தானுக்கும்,‌ சீன வாக்காளர்கள்‌ பக்காத்தான்‌ ஹராப்பானுக்கும்‌ தங்களின்‌ ஆதரவை வழங்குவார்கள்‌ என்றும்‌ அது கூறியது.

பாங்கின்‌ தாய்‌ மொழிப்‌ பள்ளி குறித்த கேள்விக்கு, பாஸ்‌ கட்சியின்‌ தகவல்‌ பிரிவுத்‌ தலைவர்‌ அஹ்மாட்‌ ஃபட்லி முறையாகப்            பதிலளிக்காமல்‌ அதற்கு எதிராகப்‌ பேசியிருப்பதன்‌ காரணத்தினால்‌, சீனர்களின்‌ வாக்குகள்‌ நிச்சயம்‌ பெரிக்காத்தானுக்குச்‌ செல்லாது என்பது தெளிவாகத்‌தெரிகிறது என்றும்‌ அது கூறியது.

தேர்தல்‌ பிரச்சாரங்களின்போது, வாழ்க்கைச்‌ செலவினம்‌, வேலை வாய்ப்புகள்‌ மற்றும்‌ பொது அடிப்படை வசதிகள்‌ குறித்த விவகாரங்கள்‌            எழுப்பப்பட்ட போதிலும்‌, இன அடிப்படையில்‌வாக்களிக்கும்‌ போக்கிற்கே திதில்‌ முக்கியத்துவம்‌ கொடுக்கப்படும்‌.

சிலாங்கூர்‌ மாநில அரசாங்கம்‌, அதன்‌ மந்திரி பெசார்‌ டத்தோ ஸ்ரீ அமுருடின்‌ ஷாரி மற்றும்‌ இத்தொகுதியின்‌ முன்னாள்‌ உறுப்பினர்‌ லீ            கீ ஹியோங்‌ ஆகியோர்‌ சிறந்த முறையில்‌சேவையாற்றி இருப்பதாக சான்றிதழ்‌ வழங்கப்பட்டது. எனினும்‌, பெரிக்கத்தானுக்குத்தான்‌ தாங்கள்‌ வாக்களிக்கப்‌ போவதாக, மலாய்க்கார வாக்காளர்களில்‌ பெரும்பாலானோர்‌                     கூறியிருக்கின்றனர்‌ என்று நேற்று வெளியிட்ட ஓர்‌ அறிக்கையில்‌ இல்ஹாம்‌ மையம்‌ தெரிவித்தது!      

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *