மருத்துவர்கள் உதவியின்றி வாகனத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த மாது! 

top-news
FREE WEBSITE AD

நூருல் அமிரா ஜெஃப்ரி (வயது 29)மற்றும் அவரது கணவர் முஹமட் ஃபௌசி அஸ்மி(வயது 30).மே 3 அன்று பிரசவத்திற்காக இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
நூருல் அமிரா ஜெஃப்ரி மற்றும் அவரது கணவரும் அதிகாலை 4.30 மணியளவில் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.  அந்த நேரத்தில் நூருல்  சுமார் இரண்டு மணி நேரம் பிரசவ வலியைத் தாங்கிக் கொண்டிருந்துள்ளார். இருவரும் லிப்ட்டுக்கு நடந்து செல்லும் பொழுது கர்ப்பப்பை தண்ணீர் குடம் உடைந்துள்ளது. அப்பொழுது நூருல் அமீரா  லிப்டில் இருந்தபோது குழந்தை பிறக்கப் போவதை உணர்ந்துள்ளார். பின்னர் காரில் ஏறிய சில நிமிடங்களில் குழந்தை பிறந்ததாக நூருல் அமிரா கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, லிப்டுக்கும், காருக்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  நூருல் காரில் அமர்ந்தவுடன் குழந்தையைப் பிரசவிக்க முடிந்த அளவு முயற்சித்துள்ளார்.  சில நிமிடங்களில் நூருலின் கணவர் உதவியுடன் குழந்தை பிறந்துள்ளது.
இரத்த பயம் கொண்ட தனது கணவர்  இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, அவரது ரத்த பயத்தை ஒதுக்கி வைத்தது ஆச்சரியமாக உள்ளது என்று  நூருல் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸ்டுலாங் பாருவில் ஒன்றாக உணவகத்தை நடத்தி வரும் நூருல் தம்பதியினர், புதிதாகப் பிறந்த குழந்தையுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர்.
அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தவுடன்  பிரசவத்திற்காக வந்ததாக  நினைத்து மருத்துவ ஊழியர்கள் அனைவரும் அவர்கள் காரின் அருகில் சென்றனர்.
பிறந்த குழந்தையைக் கையில் வைத்திருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக  நூருல் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வு இருவருக்கும் மறக்க முடியாத தருணம் என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் இறந்து போன தனது தந்தைக்குச் சொந்தமான காரில்  தன் குழந்தை பிறந்ததை உணர்ந்தபோது, தாம் வியப்படைந்ததாக நூருல் அமிரா கூறினார்.
மே 5 ஆம் தேதி தனக்கு குழந்தை பிறக்கவிருந்தது என்றும் அன்றைய நாள் தனது தந்தையின் பிறந்தநாள் என்றும் கூறிய நூருல், அன்று குழந்தை பிறந்திருந்தால் அதைக் கொண்டாட ஒரு நண்பனாக தனது தந்தை  இருந்திருப்பார் என நெகிழ்ச்சியுடன் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
தனது தந்தை  பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே குழந்தை பிறந்து விட்டது என்ற போதிலும்,  தனது குழந்தையை அவரது காரில் பிரசவித்தது, தனது தந்தையே  ஆசீர்வதித்தது போல தாம் உணர்வதாக  நூருல் அமிரா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *