வியாழன் : 15 மே, 2025
11 : 10 : 25 PM
முக்கிய செய்தி

ZAMRI VINOTH உடன் விவாதம் தேவையற்றது! PROF ராமசாமி!

top-news

மார்ச் 8,

தைப்பூசத்தில் பக்தர்களின் காவடி ஆட்டத்தைப் பேய்களின் ஆட்டம் என விமர்சித்துள்ள இஸ்லாம் மதப்போதகரான ZAMRI VINOTH போன்றவர்களை தேவையில்லாமல் கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் நிலையில் அம்மாதிரியான ஆட்களுடன் விவாத மேடையை நடத்துவதில் எந்தவோர் பயனும் இல்லை என உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார். நம்பகத் தன்மையும் அறிவும் இல்லாதவர்களுடன் நடத்தப்படும் விவாதத்தால் தேவையற்ற பதற்றமானச் சூழலை மட்டுமே விளைவிக்கும் என்பதால் விவாத மேடை தேவையில்லை என பேராசிரியர் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தால் தற்போது இருக்கும் மதங்களுக்கிடையிலானப் பிரச்சனை மேலும் மோசமாகும் என அவர் வலியுறுத்தினார். ஒரு விவாவதம் என்பது கொள்கையின் கோட்பாடுகளில் வேறுபாடுகள் கொண்டிருக்கும் இருவருக்குமான விவாதமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விவாதத்தில் அப்படியில்லை, இரு முழுக்க முழுக்க குறிப்பிட்ட சமூகத்தின் நம்பிக்கைக்கு அவதூறுகளைப் பரப்பும் நபர் சம்மந்தப்பட்டிருப்பதால், ZAMRI VINOTH மீது காவல்துறையும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினார்.

Debat dengan Zamri Vinoth yang mengkritik Thaipusam, menyatakan ia hanya menimbulkan ketegangan tanpa faedah. Beliau menegaskan perdebatan harus berdasarkan prinsip, bukan provokasi dan menggesa pihak berkuasa mengambil tindakan terhadap Zamri atas kenyataan kontroversinya katanya oleh Pegerusi Parti Urimai Prof Ramasamy

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *