விரைவில் அவெஞ்சர்ஸ் இரண்டு பாகங்களாக டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் "அயர்ன்மேன்
- Muthu Kumar
- 29 Jul, 2024
ஹாலிவுட் திரையுலகின் பிரதான நிகழ்ச்சியாக கருதப்படும் சான் டியாகோ காமிக்-கான் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற மார்வெல் ஸ்டுடியோஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி, ராபட் டவுனி ஜூனியர் மீண்டும் அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், ஆனால் அயர்ன் - மேன் கதாபாத்திரமாக இன்றி டாக்டர் டூம்(Doctor Doom) எனப்படும் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை சந்தோஷத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த அவெஞ்சர்ஸ் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக, மார்வெல் ஸ்டூடியோஸின் தலைமை செயல் அதிகாரியான கெவின் ஃபேகி அறிவித்தார். அதன்படி, 2026ம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே(Avengers Doomsday) திரைப்படமும், 2027ம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ்(Avengers Secret Wars) படமும் வெளியாக உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பின்போது, டாக்டர் டூம் வேடத்தில் மேடையில் தோன்றிய ராபர்ட் டவுனி ஜுனியர், 'டூம்ஸ்டே உடன் இரண்டு வருடங்களில் உங்களை சந்திக்க வருகிறேன். புதிய மாஸ்க், அதே டாஸ்க். நான் உங்களுக்கு என்ன சொல்ல முடியும்? சிக்கலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து வெளியாக உள்ள இரண்டு அவெஞ்சர்ஸ் திரைப்படங்களையும், எண்ட்கேம் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் தான் இயக்க உள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிச்சயம் இந்த படம் பிரமாண்ட வெற்றி பெறும் என இப்பொழுதே, மார்வெல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும், ஒஜி அவெஞ்சர்ஸ் குழுவில் இருந்த ராபட் டவுனி ஜூனியர் மீண்டும் மார்வெலுக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 2018ல் வெளியான எண்ட்கேம் திரைப்படத்திற்கு பிறகு எந்தவொரு, அவெஞ்சர்ஸ் திரைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ட்கேம் திரைப்படத்தில் தானோஸிடம் இருந்து உலகத்தை காப்பற்ற, அயர்ன் மேன் கதாபாத்திரம் தனது உயிரை தியாகம் செய்து இருக்கும். இதனால், டூம்ஸ்டே படத்தில் அவர் எப்படி மீண்டும் வருவார்? அவர் அயர்ன் மேனின் வேரியண்டாக வருவாரா? அல்லது அயர்ன்மேன் தோற்றத்தில் உள்ள மற்றொரு நபரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *