DAP - PAS சமரசப் பேச்சுவார்த்தை!
- Shan Siva
- 15 May, 2024
டிஏபியின்
லிம் கிட் சியாங், லிம்
குவான் எங் மற்றும் தெரசா கோக் ஆகியோர் பாஸ் எம்பிக்கு எதிரான அவதூறு வழக்குகள்
தொடர்பாக சிட்டி மஸ்துரா முஹம்மதுவிடம் இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த வழக்குகள்
செப்டம்பரில் ஆறு நாட்களுக்கு விசாரணைக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பினாங்கு உயர்
நீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் சர்ச்சையை மத்தியஸ்தம் மூலம் தீர்க்க
முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியதாக வழக்கறிஞர் எஸ்.என்.நாயர் தெரிவித்தார்.
DAP தலைவர்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் நாயர், பினாங்கு மாநில நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் ஒவ்வொரு
வாடிக்கையாளர்களுக்கும் மஸ்துராவிற்கும் தனித்தனி அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன
என்று கூறினார்.
மலாயாவின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சின் பெங் மற்றும் மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ ஆகியோருடன் இரத்த உறவு வைத்திருந்ததாகக் கூறிய மஸ்துராவுக்கு எதிராக கிட் சியாங் மற்றும் கட்சியின் தலைவர் குவான் எங் ஆகியோர் கடந்த நவம்பரில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நவம்பர் 4 அன்று திரெரெங்கானுவில்
உள்ள கெமாமனில் ஒரு உரையின் போது மஸ்துரா இந்த கருத்துக்களை தெரிவித்ததாகக்
கூறப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *