நாளை திட்டமிட்டபடி கால்பந்தாட்டம் நடைபெறும்! - MFL அறிவிப்பு!
- Shan Siva
- 09 May, 2024
மலேசிய கால்பந்தாட்ட வீரர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை அடுத்து, நாளை இஸ்கந்தர் புத்ரியில்
உள்ள சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த ஜோகூர் தாருல் தாசிம்
(ஜேடிடி) அணிக்கு எதிரான சேரிட்டி ஷீல்ட் போட்டியில் இருந்து சிலாங்கூர் எஃப்சி
விலக முடிவு செய்துள்ளதாக ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சுல்தான் இப்ராஹிம் ஸ்டேடியத்தில், நாளை வெள்ளிக்கிழமை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று மலேசிய
கால்பந்து லீக் சம்மேளனமான MFL தெரிவித்துள்ளது.
இந்த சீசனில் அனைத்து மலேசிய
லீக் போட்டிகளுக்கும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த கிளப் மற்றும்
பாதுகாப்புத் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் ரசிகர்களின்
பாதுகாப்பை ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம் குமார் உறுதி செய்துள்ளார், வழக்கமான 500 காவலர்கள் என்று
இல்லாமல் 1,500 காவலர்கள் பணியில்
இருப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் போட்டியின் போது
கடுமையான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை நடத்துவார்கள்.
எனவே, அணியின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக போட்டியை
ஒத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ள சிலாங்கூர் எஃப்சியின் (SFC) கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று MFL கூறியது.
சாரிட்டி ஷீல்ட் போட்டி தொடரும்
என்பது மட்டுமல்லாமல், முதல்
வாரத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து போட்டிகளும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட
அட்டவணையைப் பின்பற்றும் என்றும் அது கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *