வணிகக் குற்றங்களால் இவ்வாண்டு 1.7 பில்லியன் இழப்பு!
- Shan Siva
- 25 Sep, 2024
கோலாலம்பூர், செப் 25: இந்த ஆண்டில்
இதுவரை 20,000க்கும் அதிகமான
வணிகக் குற்றங்களால், RM 1.7 பில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வணிகக்
குற்றப் புலனாய்வுத் துறை (சிசிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1 முதல்
செப்டம்பர் 22 வரை 21,441 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
RM 1.78 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டின்
இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 23,958 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும்,
கடந்த ஆண்டு RM1.4 பில்லியனுடன் ஒப்பிடும்போது இழப்புகளின் அளவு 24% அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு 10,198 அல்லது 48% விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, வெற்றிகரமாக வழக்குத் தொடரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *