சிலாங்கூர் ஜோப் கேர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 23 நிறுவனங்கள் பங்கேற்பு!

- Muthu Kumar
- 06 Jul, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
கோலகுபு பாரு, ஜூலை 6-
நேற்று காலை கோலகுபு பாரு மெர்டேக்கா சமூக மண்டபத்தில் நடத்திய சிலாங்கூர் ஜோப் கேர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 23 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றதோடு இதுகாறும் வேலை தேடி கொண்டிருக்கும் இளையோருக்காக 3,810 பல்வேறு வேலைகளைப் பெறுவதற்கு முகப்பிடங்கள் அமைக்கப்பட்டு நிறுவன அதிகாரிகளால் நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்த நேர்காணலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக கடிதங்கள் வழங்கப்பட்டன.நேர்காணலில் கடிதங்கள் பெற்றவர்கள் 2 ஆயிரம் ரிங்கிட் அடிப்படைச் சம்பளமாகப் பெறுவர்.இவற்றில் சில துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு முன் கூட்டியே தொழில் பயிற்சியும் மாதாந்திர அலவன்சும் வழங்கப்படும். இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகுப்பது மாநில அரசு செயலகத்தின் மக்கள் நலப் பிரிவின் நடவடிக்கையாகும்.
மாநில மைல் செல் ஆவணங்களை மீட்டெடுக்க வழிமுறைகளை எடுத்துச் சொல்ல அதன் அதிகாரி திருமதி சாந்தா தலைமையில் ஒரு முகப்பிடமும் அதே வேளையில் பொதுமக்கள் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொள்ள கோலகுபுபாரு மாவட்ட சுகாதார இலாகா அதிகாரிகள் நடத்திய இலவச மருத்துவ முகாமும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றன.
Selangor Job Fair di Kuala Kubu Bharu tawarkan 3,810 peluang pekerjaan daripada 23 syarikat. Temuduga dijalankan secara terus, dengan gaji asas RM2,000. Program ini bantu belia tingkatkan pendapatan. Turut diadakan kem kesihatan percuma dan kaunter MySel dokumen.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *