பினாங்கு மாநில சாலையோரங்களில் இரண்டே நாட்களில் 4.04 டன் குப்பைகள் அகற்றம்!

- Muthu Kumar
- 26 Jun, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு. ஜூன் 26-
பினாங்கு மாநில மாநகர் மன்றத்தின் பொதுச்சேவை துறையைச் சார்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் இங்கிருக்கும் துன் டாக்டர் லிம் சோங் யூ நெடுஞ்சாலையில் நிறைவடைந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மேற்கொண்டிருந்த, ஓர் அதிரடியான தூய்மைப் பணிகளில், 4.04 டன் எடையுள்ள பற்பல குப்பைகளை அகற்றி, அச்சாலையை தூய்மை நிலைக்கு பெரும் பங்காற்றினர்.
அவ்வண்ணம் முதற் கட்டமாக சனிக்கிழமையன்று முதல் நாளில் இந்தத் தூய்மைப் பணி தொடங்கியபோது. இதில் கூட்டுறவு முறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுமார் 213 டன் எடை கொண்ட பல்வகையான குப்பைகளை அகற்றி இச்சாலையின் ஒரு பகுதியை, தூய்மையாகத் தென்படும் விதத்தில் அரும் பணியாற்றினர்.
பின்னர் அதே தொழிலாளர்கள் அனைவரும் மறுநாள் ஞாயிறன்று இதே பணியை, இச்சாலையில் மறுபுறம் நடத்திட பணிக்கப்பட்டபோது, சுறுசுறுப்புடன் தீவிரமாக களமிறங்கிய தொழிலாளர்கள் யாவரும், அன்றைய தினத்தில் சுமார் 1.91 எடை கொண்ட பற்பல குப்பை வகைளை அகற்றி, இச்சாலை முழுவதுமே தூய்மைத் தோற்றத்துடன் திகழும் வண்ணம் தங்கள் கடமையை திறம்பட ஆற்றினர்.
Pekerja pembersihan Majlis Bandaraya Pulau Pinang berjaya mengumpul 4.04 tan sampah dalam operasi dua hari hujung minggu lalu di Lebuhraya Tun Dr. Lim Chong Eu, menjadikan kawasan itu bersih dan teratur semula.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *