பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப்போட்டி!

top-news
FREE WEBSITE AD

(கே.ஆர்.மூர்த்தி)

கூலிம். மே 18-

கெடா, கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய வகை பாடாங் மேஹா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 31 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் அ. சுபராவ் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை இ.எ.எம் எலெக்ட்ரிகல் இஞ்ஜினியரிங் நிறுவனத்தின் இயக்குனர் தொழிலதிபர் எஸ். பார்த்திவன் புதல்வி குமாரி லாஷினி பார்த்திபன் சிறப்பு வருகைப் புரிந்து சிறப்புரையாற்றி தீப்பந்தம் ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இப்பள்ளியில் கல்வி கற்று வரும் பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் உள்பட 150 பேரின் இல்ல அணிவகுப்பு, தற்காப்புக் கலை படைப்பு மற்றும் இசை நடனம் ஆகியவை வருகையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் 50மீட்டர், 80மீட்டர், மற்றும் 100 மீட்டர், நேரோட்டம், அஞ்சல் ஓட்டம், கேளிக்கை விளையாட்டுகள் போன்ற பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து தங்களின் தனித்திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினார்கள்.




இவ்விளையாட்டுப் போட்டியில், மாணவன் யுவராஜ் நாயுடு முத்துக்குமார் சிறந்த விளையாட்டு வீரனாகவும் மாணவி டர்ஷிகா மனோகரன் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஒட்டு மொத்த நிலையில் அதிக புள்ளிகளைப் பெற்று சிவப்பு இல்லம் முதல் நிலையிலும் மஞ்சள் இல்லம் இரண்டாம் நிலையிலும் நீலம் இல்லம் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றன.

பள்ளியின் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பான பரிசுகளும் பதக்கங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


அதேபோல் சிறந்த இல்லத்திற்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்வாண்டுக்கான விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த பள்ளியின் புறப்பாட துணைத்தலைமை ஆசிரியர் செல்வன் மாரிமுத்து, நிர்வாகத்
துணைத்தலைமையாசிரியை திருமதி இரா. இந்திரா, மாணவர் நலத் துணைத்தலைமை ஆசிரியை திருமதி ஜெயபாரதி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன் அன்பழகன் மற்றும் அதன் செயலவை உறுப்பினர்கள், பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் சரவணன் கந்தசாமி மற்றும் றும் எல்லா வகையிலும் உதவிகரம் நீட்டியவர்கள், உதவிகள் புரிந்தவர்கள் அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் அ. சுபராவ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

SJK(T) Ladang Padang Meha mengadakan sukan tahunan ke-31 dengan pelbagai acara meriah. Yuvraj dan Dharshika dinobatkan sebagai atlet terbaik. Rumah Merah juara keseluruhan. Guru besar Subarao ucapkan terima kasih kepada semua yang menjayakan program ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *