குக் வித் கோமாளி சீசன் 5 -ன் புதிய நடுவரான மாதம்பட்டி ரங்கராஜன் பேச்சால் சர்ச்சையா?

top-news
FREE WEBSITE AD

நான் வெங்கடேஷ் பட் சாரை பார்த்தது கூட கிடையாது, அவரை பற்றியும் எனக்கு தெரியாது என குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5-யின் புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்று வருகிறார். 

 மாதம்பட்டி ரங்கராஜிடம், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நீங்கள் நடுவராக வந்தது எப்படி என குரேஷி கேட்டார். அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதில் கூறுகையில், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோவிலிருந்து போன் வந்தது.

குக் வித் கோமாளி ஷோவுக்கு ஒரு நடுவராக வர வேண்டும் என கேட்டார்கள். அதற்கு நான் ஒரு நாள் அவகாசம் கேட்டேன். வரும் செப்டம்பர், அக்டோபர் வரை நான் திருமணத்திற்கு கேட்டரிங்கிற்காக புக்கிங் செய்துள்ளேன். எனவே அந்த தேதியும் குக் வித் கோமாளி ஷூட்டிங்கும் கிளாஷ் ஆகக் கூடாது என கேட்டேன்.

அவர்களும் கண்டிப்பாக செய்து கொடுப்பதாக தெரிவித்திருந்தனர். நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். Chef தாமு சார் போன்ற லெஜண்ட்டுடன் நிற்கும் போது நாம் இந்த நிகழ்ச்சியை எப்படி செய்ய போகிறோம் என நினைத்தேன். அவர்கள் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சியை நான் இதுவரை முழுமையாக டிவியில் பார்த்ததில்லை. ஆனால் சிறு சிறு காணொளிகள் பார்த்துள்ளேன்.

நான் சமையல் தொழிலுக்கு திடீரென வந்துவிடவில்லை. கேட்டரிங் படித்துள்ளேன், என் அப்பா, செஃப்பிடம் கற்றுக் கொண்டு வந்தேன். அது போல் சினிமாவில் நடித்த போது கூட கூத்துப் பட்டறையில் கற்றுக் கொண்டு நடித்தேன். எங்கள் நிறுவனத்தின் செஃப் சந்தீப் என்பவரிடம் நான் மாதத்தில் இரு நாட்கள் டியூஷன் போகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் நான் கோமாளிகளை பார்த்தெல்லாம் பயப்படவில்லை. ரசித்தேன். 22 ஆண்டுகளாக வேலை வேலை என ஓடிக் கொண்டே இருந்தேன். கேட்டரிங்கில் திடீரென அதிக கூட்டம் வந்துவிடுமோ என்றெல்லாம் பயம் இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி எனக்கு சந்தோசமாக  இருக்கிறது.

வாரத்தில் ஒரு நாள் ஷூட் எப்போது வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். புகழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.  குரேஷி டைமிங்கிற்கு போடும் காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ராமர் அண்ணா, தங்கதுரையையும் பிடிக்கும். சுனிதா என்னோடு ஒரு படத்தில் நடித்துள்ளார்.

நான் இந்த ஷோவில்  நிச்சயம் ஆகும் வரை இன்னொரு நடுவராக நான் மாற்றம் காண இருக்கிறேன்  என்பதை எல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை., நானும் கேட்டுக் கொள்ளவும்வில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். யாரும் யாரையும் மாற்றம் செய்ய முடியாது. ஆனால் வெங்கடேஷ் சாரை நான் இதுவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது. அவரை பற்றிக் கூட எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் ஒரு திறமைசாலி என்பது மட்டும் எனக்கு தெரியும். எனினும் நாம் இந்த நிகழ்ச்சியில் எப்படி செய்யலாம் என யோசிப்பேன். மற்றபடி யாரையும் யாருடனும் ஒப்பிட மாட்டேன். நான் நானாக இருப்பேன். இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *